ரோஜா மலர் இதய நோய்களிலிருந்து விடுபட, உடலுக்கு பலம் தந்து இதயம், நரம்பு மண்டலத்திற்கு நன்மை அளிக்கும். தொண்டையிலுள்ள நோய் சளி, இருமல், சுவாச நோய் நாவறட்சியை குணமாக்கும் என்று மருத்துவர் நித்யா கூறுகிறார். மேலும் ரோஜா இதழ்களை எந்த நோய்க்கு எப்படி பயன்படுத்தலாம் என்றும் அவர் தனது யூடியூப் பக்கத்தில் கூறி இருக்கிறார்.
Advertisment
அதிலும் குறிப்பாக மாதவிடார், வெள்ளைப்படுதல் போன்ற பிரச்சனைக்கு ரோஜா இதழ்களை வைத்து எப்படி தேநீர் போடலாம் என்று பார்ப்போம்.
செய்முறை: ரோஜா இதழ்களை கழுவி சுத்தம் செய்து கொள்ளவும். பின்னர் இதனை 1/2 மணி நேரம் தண்ணீரில் கொதிக்க வைக்க வேண்டும். ஒரு கிளாஸ் தண்ணீர் அரை கிளாஸ் ஆகும் வரை கொதிக்க விடவும். அப்படியே எடுத்து வடிகட்டி குடிக்கலாம். தேவைப்பட்டால் நாட்டுச்சர்க்கரை, பனைவெல்லம் சேர்க்கலாம்.
வாய்ப்புண் பிரச்சனை உள்ளவர்கள் ரோஜா இதழ்கள் எடுத்து தண்ணீரில் போட்டு கொதிக்க விட்டு வெதுவெதுப்பான சூட்டில் வாய் கொப்பளிக்கலாம். ஒரு நாளைக்கு இரண்டு முறை செய்து வருவதன் முன் வாய்ப்புண், நாக்குப்புண் சரியாகும்.
Advertisment
Advertisements
மூலம் போன்ற பிரச்சனை உள்ளவர்கள் ரோஜாப்பூ இதழ்களை தண்ணீர் போட்டு கொதிக்க விட்டு வடிகட்டி குடிக்கலாம். வெள்ளை சர்க்கரை சேர்க்காமல் நாட்டுச் சர்க்கரை சேர்த்து குடிக்கலாம்.
ரோஜா இதழ் தேநீர் தொடர்ந்து பெண்கள் சாப்பிட்டு வர மாதவிடாய் நேரத்தில் இடுப்பு வலி, அடி வயிற்று வலி வராது. வெள்ளைப்படுதல் பிரச்சனை குணமாகும். கர்ப்பப்பை சம்பந்தப்பட்ட எந்த பிரச்சனையும் வராமல் தடுக்கும்.
பெண்களுக்கு பிசிஓடி, கருப்பை புற்றுநோய் வராமல் தடுக்கும். சிறுநீர் பாதையில் இருக்கும் தொற்று குணமாகும். ரத்தத்தில் இருக்கக்கூடிய கழிவுகளை வெளியேற்றி ரத்தத்தை சுத்தம் செய்யும். உடம்பில் பித்தம் அதிகரிக்காமல் பார்த்துக் கொள்ளும்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.