உடலுக்கு மிகவும் ஆரோக்கியமான ராகி சப்பாத்தி புசுபுசுன்னு எப்படி செய்வது என்று பார்ப்போம். மிகவும் சுவையாகவும் உடலுக்கு வலு சேர்க்கவும் உதவும். புசுபுசுன்னு சுவையான ராகி சப்பாத்தி எப்படி செய்வது என்று அக்ஷயா வீட்டு சமையல் யூடியூப் பக்கத்தில் கூறியிருப்பது பற்றி பார்ப்போம்.
Advertisment
தேவையான பொருட்கள்:
தண்ணீர் உப்பு எண்ணெய் ராகி மாவு
செய்முறை:
Advertisment
Advertisements
ஒரு பாத்திரத்தில் தண்ணீர், உப்பு மற்றும் எண்ணெய் சேர்த்து கொதிக்க வைக்கவும். கொதிக்கும் தண்ணீரில் ராகி மாவு சேர்த்து கட்டி இல்லாமல் கிளறவும். ஸ்டவ்வை அணைத்துவிட்டு, மாவை மூடி போட்டு சிறிது நேரம் வைக்கவும்.
சூடு பொறுக்கும்போது, கையில் எண்ணெய் தடவி மாவை நன்கு பிசைந்து கொள்ளவும். பிசைந்த மாவை சிறிய உருண்டைகளாக உருட்டி, ராகி மாவு தூவி மெல்லிய சப்பாத்திகளாக தேய்க்கவும்.
தோசைக்கல்லை சூடாக்கி, சப்பாத்திகளைப் போட்டு இருபுறமும் வேக வைக்கவும். சப்பாத்தி வெந்ததும், தேவைப்பட்டால் எண்ணெய் அல்லது நெய் தடவி திருப்பி போடு எடுக்கலாம்.