கடைகளில் கிடைக்கும் பத்து ரூபாய் ரஸ்க் பாக்கெட்டில் சுவையான அல்வா 10 நிமிடத்தில் எப்படி செய்வது என்று பார்ப்போம்.
என்னதான் ரஸ்க் டீ, பாலில் தொட்டு சாப்பிட்டு இருப்போம். ஆனால் அதை வைத்து அல்வா செய்து இருக்கிறோமா? ரஸ்க் அல்வா சுவையாகவும் குழந்தைகளுக்கு ஒரு வித்தியாசமான இனிப்பு வகையாகவும் இருக்கும்.
தேவையான பொருட்கள்
நெய்
பாதாம்
பிஸ்தா
முந்திரி
ரஸ்க்
ஏலக்காய்
சுடு தண்ணீர்
சர்க்கரை
குங்குமப்பூ
செய்முறை
ஒரு கடாயில் நெய் ஊற்றி அதில் பாதாம், பிஸ்தா, முந்திரி ஆகியவற்றை வறுத்து எடுத்துக் கொள்ளவும். பின்னர் ஒரு மிக்ஸி ஜாரில் ரஸ்க், ஏலக்காய் சேர்த்து மைய அரைத்து நெய்யில் வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
அடுப்பை மிதமான சூட்டில் வைத்து அதில் ரஸ்க் தூளை கொட்டி லேசாக வறுத்து கொதிக்கும் சுடு தண்ணீரை அதில் ஊற்றி கலந்து வந்து விடவும். சிறிது நேரம் கழித்து அதனுடன் பொடி செய்த சர்க்கரையை சேர்த்து கட்டி விழாமல் கலந்து விட்டு அதில் சிறிது நெய் ஒரு சிட்டிகை குங்குமப்பூ, வறுத்த நட்ஸ் சேர்த்து கலந்து விடவும்.
ரஸ்க் அல்வா செஞ்சு சாப்பிடுங்க..
சிறிது நேரத்தில் நெய் பிரிந்து பாத்திரத்தில் அல்வா ஒட்டாத பதத்தில் இருக்கும்போது இறக்கினால் சுவையான ரஸ்க் அல்வா ரெடி ஆகிவிடும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“