சம்மருக்கு குளுகுளுன்னு குடிக்க வீட்டில் இருக்கும் ஜவ்வரிசி வைத்து சுவையான ஜவ்வரிசி சர்பத் எப்படி செய்வது என்று பார்ப்போம்.
Advertisment
தேவையான பொருட்கள்
ஜெல்லி தண்ணீர் - 400 மி.லி ஜவ்வரிசி - 1 கப் ஜெல்லி துண்டுகள் பால் - 1 லிட்டர் காய்ச்சி ஆறவைத்தது சர்க்கரை - 1/4 கப் ரோஸ் சிரப்
செய்முறை
Advertisment
Advertisements
ஒரு பாத்திரத்தில் ஜெல்லி கிரிஸ்டல்ஸ் , தண்ணீர் சேர்த்து கரைத்து ஒரு டிரேயில் கொட்டி ஜெல்லிதயார் செய்யவும். இதை நன்றாக ஆற விடவும். ஆறியதும் சின்ன சின்ன துண்டுகளாக வெட்டி கொள்ளவும்
ஒரு கப் ஜவ்வரிசியை ஒரு மணி நேரம் ஊறவைத்து, ஒரு பாத்திரத்தில் தண்ணீர் மற்றும் ஜவ்வரிசியை சேர்த்து வேக வைக்கவும். வெந்ததும் வடிகட்டி மேல கொஞ்சம் குளிர்ந்த நீர் ஊற்றவும்.
ஒரு பெரிய பாத்திரத்தில் ஒரு லிட்டர் காய்ச்சி ஆற வைத்த பால் , கால் கப் சாக்கரை, கொஞ்சம் ரோஸ் சிரப் சேர்த்து கலந்து விடவும். வேக வைத்த ஜவ்வரிசியை சேர்க்கவும். பிரிட்ஜ்ல் இரண்டு மணி நேரம் குளிர வைக்கவும்.
ஜெல்லி துண்டுகளை சேர்த்து கலந்து ஜில்லென்று பரிமாறவும்.