தினமும் வெற்றிலை சாப்பிடுவதால் ஏற்படும் ஆரோக்கிய நன்மைகள் குறித்து சத்குரு ஜக்கி வாசுதேவ் தெரிவித்த கருத்துக்களை இப்போது பார்ப்போம்.
வெற்றிலை பாரம்பரியமாக நாம் சாப்பிட்டு வரும் ஒன்று. விஷேச நாட்களில் வெற்றிலை இல்லாமல் எந்த செயலும் நடைபெறாது. முதியவர்களில் சிலருக்கு இன்றும் வெற்றிலை போடும் பழக்கம் உள்ளது. நடுத்தர தலைமுறையினரில் சிலருக்கு சாப்பிட்ட பின் வெற்றிலை போடும் பழக்கம் இருக்கு. அல்லது விஷேச நாட்களில் மட்டுமாவது எடுத்துக் கொள்வார்கள். ஆனால் இன்றைய தலைமுறையினர் பெரும்பாலும் வெற்றிலையை தொடுவதில்லை.
ஆனால், வெற்றிலையின் ரகசியம் தெரிந்தால் நீங்கள் அதை தினமும் எடுத்துக் கொள்வீர்கள் என்று சத்குரு ஜக்கி வாசுதேவ் தனது யூடியூப் வீடியோவில் விளக்கியுள்ளார்.
வெற்றிலைக்கு அதிகபட்ச சூரிய ஒளியை எடுத்துக் கொள்ளும் ஆற்றல் இருக்கிறது. வெற்றிலை சாப்பிட்டால் உங்கள் நரம்பு மண்டலம் மேம்பட்டு, உணர்திறனும் மேம்படும்.
காபி, டீ-க்கு மாற்றாக நரம்பு மண்டலத்தை தூண்டும் பொருளாக வெற்றிலை இருந்து வருகிறது. நீங்கள் வயிறு நிறைய சாப்பிட்ட பின் வெற்றிலையை தின்றால் உங்களுக்கு தூக்கம் வராது. அதேநேரம் பரபரவென இல்லாமல் நரம்பு மண்டலம் மென்மையான விதத்தில் தூண்டப்படுகிறது.
வெற்றிலை சாப்பிடும் பழக்கம் நீண்ட காலமாக இருந்து வருகிறது. அதேநேரம் வெற்றிலையை நீளவாக்கில் கிழித்து சாப்பிடக் கூடாது. ஏனெனில் வெற்றிலையின் தண்டில் அதிக சத்து உள்ளது. இவ்வாறு சத்குரு தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“