சாலியா விதைகளில் நிறைய ஆரோக்கிய நன்மைகள் உண்டு. உடல் எடை குறைக்கும், முடி வளர்ச்சி மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். அவ்வளவு நன்மைகள் கொண்ட சாலியா விதைகளை வைத்து எப்படி பாயாசம் செய்வது என்று இந்தியன் ரெஸிபீஸ் யூடியூப் பக்கத்தில் கூறியிருப்பதாவது,
தேவையான பொருட்கள்:
சாலியா விதைகள் - 3 ஸ்பூன்(3 பேருக்கு)
மகானா-1 கப்
முந்திரி பருப்பு - 1/4 கப்
பாதாம் - 1/4 கப்
தேங்காய் - 1/2 கப்
பேரீச்சம்பழம் - 5
பால் - 500 மி.லி.
குங்குமப்பூ
ஏலக்காய்-3
ஜாதிக்காய்
சுக்கு
செய்முறை
சாலியா விதைகளை இரவு முழுவதும் தண்ணீரில் ஊறவைத்து எடுத்துக் கொள்ளவும். பால் நன்கு கொதித்து பொங்கி வந்ததும் மேலே சிறிது குங்குமப்பூவையும் சேர்த்துக் கொள்ளவும். பின்னர் ஊற வைத்துள்ள சாலியா விதைகளை பாலில் ஊற்றவும்.
இரண்டையும் நன்றாக கலந்து விடவும். இப்போது ஒரு கடாயில் மக்கானா சேர்த்து வறுக்கவும். அதனுடன் நறுக்கிய தேங்காய் இதை இரண்டும் சேர்த்து நன்கு வறுக்கவும். பின்னர் பாதாம், முந்திரி சேர்த்து வதக்கவும். இவை அனைத்தும் மொறுமொறுப்பாக வறுபட்டு வந்ததும் இதனை எடுத்து ஆற வைக்கவும்.
அடுத்ததாக இதனை மிக்ஸி ஜாரில் சேர்த்து ஏலக்காய் சிறிது சேர்த்து நல்ல பவுடராக அரைத்துக் கொள்ளவும். பின்னர் பேரிச்சம் பழத்தை எடுத்து விதைகளை நீக்கி சிறிது சிறிதாக நறுக்கி வைக்கவும்.
உடல் எடை குறைக்க,தலை முடி வளர,இரத்தம் ஊற,Periods சரிவர healthy பாயாசம்| haleem seed payasam tamil
இப்போது பாலில் அரைத்து வைத்துள்ள பவுடரை போட்டு கட்டி இல்லாமல் கலக்கவும். நன்கு கொதிக்க விடவும் பால் கொஞ்சம் திக்காக மாறும் வரை கொதிக்க விட்டு எடுக்கலாம். பின்னர் இறக்கும்போது அதில் பேரீச்சம் பழத்தை சேர்த்து இறக்கி பரிமாறலாம்.
இதனை காலையில் வெறும் வயிற்றில் வாரத்தில் ஒரு முறையாவது எடுத்துக் கொள்ளலாம். உடலில் நல்ல மாற்றம் தெரியும் ஆரோக்கியம் மேம்படும்.