மாதம்பட்டி ரங்கராஜ் செய்வது போல் சாம்பார் இட்லி வீட்டில் செய்து பாருங்க.
தேவையான பொருட்கள்
காஷ்மீரி மிளகாய் 100 கிராம்
காய்ந்த மிளகாய் 100 கிராம்
200 கிராம் தனியா
100 கிராம் சீரகம்
100 கிராம் மிளகு
100 கிராம் வெந்தயம்
துவரம் பருப்பு 150 கிராம்
பாசி பருப்பு 150 கிராம்
150 கிராம் சின்ன வெங்காயம்
2 முருங்கைக்காய்
கால் ஸ்பூன் மஞ்சள் பொடி
1 ஸ்பூன் நெய்
100 எம்.எல் புளி தண்ணீர்
வெல்லம் 50 கிராம்
4 தக்காளி
கருவேப்பிலை
500 எம்.எல் தண்ணீர்
அரை ஸ்பூன் மஞ்சள் தூள்
5 ஸ்பூன் கடலை எண்ணெய்
1 ஸ்பூன் கடுகு
3 பெரிய வெங்காயம் நறுக்கியது
15 கிராம் பெருங்காயம்
கொத்தமல்லி இலை ஒரு கை நறுக்கியது
செய்முறை : குக்கரில், துவரம் பருப்பு, பாசி பருப்பு, சின்ன வெங்காயம், முருங்கைக்காய், மஞ்சல் பொடி சேர்த்து 4 விசில் விட்டு எடுக்கவும். தொடர்ந்து ஒரு பாத்திரத்தில் நெய் விட்டு, அதில் கருவேப்பிலை, தக்காளி நறுக்கியதை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். தொடர்ந்து அதில் புளி தண்ணீர், வெல்லம் சேர்க்கவும். தொடர்ந்து 150 எம்.எல் தண்ணீர் சேர்த்து கொதிக்க வேண்டும். 8 முதல் 10 நிமிடம் வரை கொதிக்க வேண்டும். தொடர்ந்து அவித்த பருப்பு கலவையை இதில் சேர்க்கவும். தொடர்ந்து 500 எம்.எல் தண்ணீர் சேர்க்கவும். தொடர்ந்து மஞ்சள் தூள், உப்பு சேர்த்து கிளரவும். தொடர்ந்து கொதி வர வேண்டும். அடுப்பை அணைக்கவும். இதை தனியாக எடுத்து வைக்கவும். தொடர்ந்து ஒரு பாத்திரத்தில் எண்ணெய் சேர்க்கவும். கடுகு சேர்க்கவும். தொடர்ந்து நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து கிளரவும். பெருங்காயம் தண்ணீரில் கரைத்ததை சேர்க்கவும். சாம்பார் பொடியை 2 ½ ஸ்பூன் சேர்க்கவும். தொடர்ந்து இதை சாம்பாரில் கொட்டி கொதிக்க வக்கவும்.
சாம்பார் இட்லி
தேவையான பொருட்கள்
2 ஸ்பூன் நெய்
8 சின்ன வெங்காயம் நறுக்கியது
3 ஸ்பூன் எண்ணெய்
செய்முறை: நாம் சிறிதாக இட்லி செய்து அதை ஒரு பாத்திரத்தில் சேர்த்து, அதில் கொதிக்கும் சாம்பாரை ஊற்ற வேண்டும். நெய் சேர்க்கவும். சின்ன வெங்காயத்தை நறுக்கி எண்ணெய்யில் வதக்கி அதை சாம்பார் இட்லியில் சேர்த்து பரிமாறவும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“