இந்த சாம்பர் பொடி செய்து வைத்தால் போதும். அசத்தும் சுவையில் சாம்பார் செய்யலாம்.
தேவையான பொருட்கள்
காய்ந்த மிளகாய் – 100 கிராம்
மல்லி – 100 கிராம்
கடலை பருப்பு – 20 கிராம்
துவரம் பருப்பு – 20 கிராம்
உளுந்து – 20 கிராம்
அரிசி – 20 கிராம்
சீரகம் – 10 கிராம் அல்லது 4 டீஸ்பூன்
வெந்தயம் – 10 கிராம் அல்லது 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 4 கிராம் அல்லது 1 டீஸ்பூன்
பெருங்காயம் – 4 கிராம் அல்லது 1 டீஸ்பூன்
செய்முறை
அடுப்பில் ஒரு வாணலியை வைத்து காய்ந்த மிளகாய், மல்லி, துவரம் பருப்பு, கடலைப் பருப்பு, உளுந்து, அரிசி, சீரகம் மற்றும் வெந்தயம் ஆகியவற்றை தனித்தனியாக, மிதமான சூட்டில் வறுத்து எடுத்துக் கொள்ளவும். ஆறிய பின், எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து, ஒரு மிக்ஸியில் போட்டு பாதி அளவு அரைபடுமாறு அரைக்க வேண்டும்.பின்னர் இதனுடன், பெருங்காயம் மற்றும் மஞ்சள் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும். இப்போது நல்ல வாசனையுடன் கூடிய சுவையான சாம்பார் பொடி ரெடி. இந்த பொடியை ஒரு காற்று புகாத டப்பாவில் போட்டு சேமித்து வைத்துக் கொள்ளுங்கள். இதனை நீண்ட நாட்களுக்கு வைத்து பயன்படுத்தலாம். நீங்கள் சாம்பார் வைக்கும் போது இந்த சாம்பார் பொடியை சேர்த்து சுவையான சாம்பார் செய்து சாப்பிடுங்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“