கடைகளில் கிடைக்கும் சாம்பார் பொடியைவிட. இப்படி தனியாக வறுத்து அரைத்து எடுத்துகொள்ளுங்கள். இந்த சாம்பார் பொடியில் சாம்பார் வைத்தால் ஊரே மணக்கும்.
தேவையான பொருட்கள்
2 டேபிள் ஸ்பூன் உளுந்து
2 டேபிள் ஸ்பூன் கடலை பருப்பு
4 டேபிள் ஸ்பூன் தனியா
ஒரு டேபிள் ஸ்பூன் சீரகம்
ஒரு டேபிள் ஸ்பூன் மிளகு
ஒரு டீஸ்பூன் வெந்தயம்
ஒரு டேபிள் ஸ்பூன் அரிசி
கட்டி பெருங்காயம்
4 டேபிள் ஸ்பூன் கொப்பரை தேங்காய் துருவியது
20 வரை மிளகாய்
கருவேப்பிலை
மஞ்சள் பொடி
செய்முறை: கடலை பருப்பு, உளுந்து ஆகியவற்றை நன்றாக வறுத்து எடுத்துகொள்ள வேண்டும். தனியாவை நன்றாக வறுக்க வேண்டும். தொடர்ந்து சீரகம், மிளகு, வெந்தயத்தை நன்றாக வறுக்க வேண்டும். அரிசியை தனியாக வறுக்க வேண்டும். கொப்பரை தேங்காய் நன்றாக வெறுக்க வேண்டும். தொடர்ந்து மிளகாய்யை வறுக்கவும். கடைசியாக கருவேப்பிலை 2 கொத்து இலைகளை வறுக்கவும். இதை எல்லாம் ஒன்றாக கலந்து பெருங்காயம், மஞ்சள் பொடி சேர்த்து அரைத்து எடுத்துகொள்ளுங்கள். சுவையான சாம்பார் பொடி ரெடி.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“