எப்போதும் வழக்கமான ஸ்நாக்ஸ் ரெசிபி செய்து சலிப்பாக இருந்தது என்றால் இந்த சமோசா சாட் ரெசிபி ட்ரை பண்ணி பாருங்க. மாலை வேளையில் டீ, காபியுடன் சூடாக சாப்பிட சுவையாக இருக்கும். அதுவும் தற்போது குளிர் காலத்தில் கூடுதல் சுவையுடன் இருக்கும்.
தேவையான பொருட்கள்
சமோசா – 3
தயிர் – 3 டீஸ்பூன்
வெங்காயம் – 1
தக்காளி – 1
கொத்தமல்லி இலை – டீஸ்பூன்
புதினா சட்னி – 2 டீஸ்பூன்
புளி சட்னி – 2 டீஸ்பூன்
மிளகாய் தூள் – 1/2 டீஸ்பூன்
சாட் மசாலா – 1/2 டீஸ்பூன்
ஓமப் பொடி – 1 கப்
உப்பு – தேவைக்கு ஏற்ப
செய்முறை
முதலில் தக்காளி, வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும். சூடான சமோசாவை சிறு சிறு துண்டுகளாக உடைத்து போட்டு கொள்ளவும். தயிரை கட்டிகள் இல்லாமல் நன்கு கலக்கி எடுத்துக் கொள்ளவும்.
இப்போது, உடைத்த சமோசாவை ஒரு பாத்திரத்தில் போட்டு அதன் மேல் தயிரை ஊற்றவும். அடுத்து அரைத்து வைத்த சட்னிகளை சேர்க்கவும். கூடுதல் இனிப்பு, புளி சுவை வேண்டும் என்று நினைத்தால், புளி சட்னியை அதிகம் சேர்க்கவும். பின், நறுக்கிய வெங்காயம்., தக்காளியை சேர்த்து கலக்கவும். கடைசியாக அதன் மேல் ஓமப் பொடியை தூவி பரிமாறவும். இப்போது சூப்பரான சமோசா சாட் ரெடி.