கோடை விடுமுறை விட்டாச்சு இனி பிள்ளைகள் எதாவது ஸ்நாக்ஸ் செய்து கொடுக்க சொல்லி கேட்க ஆரம்பித்து விடுவார்கள். தினமும் ஒரு ஸ்நாக்ஸ் செய்து கொடுக்க வேண்டிய நேரம் வந்து விட்டது. அதனால் இனி விதவிதமான ஸ்நாக்ஸ் செய்ய கற்றுக்கொள்ளுங்கள்.
Advertisment
அதுவும் பிள்ளைகளுக்கு ஹெல்தியாகவும் கடைகளில் கிடைப்பது போன்றும் செய்து கொடுக்க கற்றுக்கொள்ளுங்கள். கேக், முறுக்கு, ஜூஸ், பர்பி என பலவகையான் ஸ்நாக்ஸ் வகைகள் உள்ளது. அதை எல்லாம் செய்வதை விட பிள்ளைகளுக்கு பிடித்த மாதிரி செய்வது தான் டாஸ்க். அப்படியாக் ஐந்த சம்மருக்கு சுவையான சான்விட்ச் எப்படி செய்வது என்று ஹோம் குக்கிங் தமிழ் யூடியூப் பக்கத்தில் கூறியிருப்பது பற்றி பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
பிரட் துண்டுகள் உப்பில்லாத வெண்ணெய் பூண்டு - மோஸ்சரெல்லா சீஸ் - ஸ்வீட் சோளம் சிவப்பு குடைமிளகாய் பச்சை குடைமிளகாய் வெங்காயம் பச்சை மிளகாய் உப்பு மிளகு தூள் இட்டாலியன் சீசனிங் சில்லி பிளேக்ஸ் கொத்தமல்லி இலை
Advertisment
Advertisements
செய்முறை:
கார்லிக் பட்டர் செய்ய ஒரு பாத்திரத்தில் உப்பில்லாத வெண்ணெய், துருவிய பூண்டு, சில்லி பிளேக்ஸ், உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். மோஸ்சரெல்லா சீஸ்சை துருவிக்கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் வேகவைத்த ஸ்வீட் சோளம், நறுக்கிய சிவப்பு குடைமிளகாய், பச்சை குடைமிளகாய், வெங்காயம், பச்சை மிளகாய், பூண்டு சேர்க்கவும்.
பின்பு உப்பு, மிளகு தூள், இட்டாலியன் சீசனிங், சில்லி பிளேக்ஸ், துருவிய மோஸ்சரெல்லா சீஸ், நறுக்கிய கொத்தமல்லி இலை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். பிரட் துண்டில் செய்த கார்லிக் பட்டரை தடவி, பின்பு தயார் செய்த பில்லிங்-ஐ வைத்து அதன் மேல் மற்றோரு கார்லிக் பட்டர் தடவிய பிரட் துண்டை வைத்து மூடவும்.
பின்பு பானில் வெண்ணெய் தடவி தயார் செய்த பிரட் துண்டுகளை வைக்கவும். பிரட் துண்டின் மேல் வெண்ணெய் தடவி கடாயை மூடி மிதமான தீயில் பொன்னிறமாகும் வரை வேகவிடவும் . பின்பு மறுபக்கம் திருப்பி விட்டு கடாயை மூடி பொன்னிறமாகும் வரை வேகவிடவும் . அருமையான வெஜ் சீஸ் சான்விச் தயார்.