Advertisment

வித்தியாசமான ரெசிபி: சப்போட்டா வைத்து கேசரி இப்படி செய்யுங்க!

சப்போட்டா, ரவை வைத்து கேசரி செய்வது குறித்து இங்கு காண்போம்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Sapota kesari

Sapota kesari recipe

சப்போட்டா கேசரி ரெசிபி செய்வது குறித்து இங்கு காண்போம்.

Advertisment

தேவையான பொருட்கள்

சப்போட்டா பழம்- 8

சர்க்கரை- 1/2கப்

ரவை- 1/2கப்

பால்- 1/4கப்

நெய்- 1/4கப்

பாதம், முந்திரி, பிஸ்தா- 1/2கப்

ஏலக்காய் தூள்- கால் டீஸ்பூன்

செய்முறை

நன்கு பழுத்த சப்போட்டா பழங்களை எடுத்து தோல் உரித்து வைத்துக் கொள்ளவும். தோல் நீக்கிய சப்போட்டா பழங்களை ஒரு மிக்சி ஜாரில் போட்டு அரைத்து எடுக்கவும். அதன் பிறகு ஒரு நான்ஸ்டிக் கடாயில் நெய் சேர்த்து சூடானதும், நறுக்கி தயாராக வைத்துள்ள நட்ஸ் சேர்த்து வதக்கவும். அதை தனியே எடுத்து வைக்கவும்.

அடுத்து அதே கடாயில் ரவை சேர்த்து பொன்னிறமாக வறுக்க வேண்டும். பின்னர் கொஞ்சம் பால் சேர்த்து கலந்துவிடவும். அதன் பிறகு சர்க்கரை சேர்த்து கட்டி விழுகாமல் நன்கு கலக்கவும். பின்னர் அரைத்து வைத்துள்ள சப்போட்டா விழுது, ஏலக்காய் தூள் சேர்த்து கலக்கவும். மேலும் கொஞ்சம் பால் சேர்த்து இந்த கலவையை மூடி வைக்க வேண்டும். இறுதியாக வறுத்து வைத்துள்ள நட்ஸ் சேர்த்து நன்கு கலந்து இறக்கினால் சுவையான சப்போட்டா கேசரி ரெடி.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Food Recipes
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment