/indian-express-tamil/media/media_files/2025/09/30/screenshot-2025-09-30-163039-2025-09-30-16-30-57.jpg)
சரஸ்வதி பூஜை தினத்தில், வீட்டில் இனிப்பு மற்றும் காரம் ஆகிய இரண்டு வகையான பிரசாதங்களையும் செய்யும் வழக்கம் பரவலாக இருக்கிறது. இந்த புனித நாளில் கல்வியின் கடவுளான சரஸ்வதிக்கு நன்றி தெரிவித்து, நம் வீடு, குடும்பம் மற்றும் குழந்தைகளுக்கு கல்வி மற்றும் அறிவு வளம் கிடைக்க பிரார்த்தனை செய்வதுடன், சிறப்பு வகை சாப்பாடுகளும் தயாரிக்கப்படுகின்றன.
இந்த நேரத்தில், "எளிமையாக சுவையாக என்ன பிரசாதம் செய்யலாம்?" என்ற எண்ணம் பலருக்கும் இருக்கும். அதற்காகவே, சரஸ்வதி பூஜைக்கு சிறந்ததாக இருக்கும் சில இனிப்பு மற்றும் கார வகை ரெசிபிகளை இங்கு தொகுத்து வழங்குகிறோம். தயார் செய்ய எளிதானதும், சுவையாகவும் இருக்கும் இந்த ரெசிபிகள் உங்கள் குடும்பத்தினர் மற்றும் நெருங்கியவர்களுடன் பகிர்ந்து மகிழ சிறந்த வாய்ப்பாக அமையும். இனி, சிரமமின்றி உங்கள் பூஜைக்கு தேவையான இனிப்பு மற்றும் கார வகைகளைத் தேர்ந்தெடுத்து செய்வது எப்படி என்பதை விரிவாகப் பார்ப்போம்.
கார போண்டா செய்ய தேவையான பொருட்கள்
உளுத்தம் பருப்பு – 1/2 கப்
இட்லி அரிசி – 1 கப்
பச்சை மிளகாய் – 2 (நறுக்கி)
இஞ்சி – 1 டீஸ்பூன் (சிறிய துண்டுகளாக நறுக்கவும்)
வெங்காயம் – 1 (நறுக்கியது)
மிளகு – 1/2 டீஸ்பூன்
சோம்பு – 1/2 டீஸ்பூன் (விரும்பினால்)
கருவேப்பிலை – சில
கொத்தமல்லி இலை – 1 டேபிள் ஸ்பூன் (நறுக்கியது)
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – பொரிக்க தேவையான அளவு
செய்முறை
உளுத்தம் பருப்பு மற்றும் இட்லி அரிசியை நன்கு கழுவி 3 முதல் 4 மணி நேரம் தண்ணீரில் ஊறவைக்க வேண்டும். அதன் பிறகு, இந்த ஊறிய பருப்பு மற்றும் அரிசியை மிக்ஸியில் அதிகம் தண்ணீர் விடாமல், சற்று கனமான மற்றும் மையமான பதத்தில் அரைக்க வேண்டும். மாவு கையால் பிடிக்கக் கூடிய அளவிற்கு இருக்க வேண்டும். பின்னர், அரைத்த மாவில் நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி, வெங்காயம், மிளகு, சோம்பு, கருவேப்பிலை, கொத்தமல்லி இலை மற்றும் தேவையான உப்பை சேர்த்து நன்றாக கலக்க வேண்டும்.
இப்போது ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி நன்கு காயவைத்து, அதில் ஒரு கைரளவு மாவை எடுத்து ரவையாக போட்டு எல்லாபக்கமும் பொன்னிறமாக வரும் வரை மிதமான தீயில் பொரிக்க வேண்டும். பிறகு, அதனை tissue paper மீது எடுத்து எண்ணெய் வடிக்க விடலாம். இந்த கார போண்டாவை சட்னி அல்லது சாம்பார் உடன் காலை உணவாகவோ, மாலையில் சிறந்த ஸ்நாக்ஸாகவோ பரிமாறலாம்.
இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் ஒரு உளுந்து பருப்பின் சுவையுடன் கூடிய ருசிகரமான ரெசிபியாகும்!
இப்போது இனிப்பாக இதை எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம்.
இனிப்பு போண்டா செய்ய தேவையான பொருட்கள்
உளுத்தம் பருப்பு – 1/2 கப்
இட்லி அரிசி – 1 கப்
தேங்காய் துருவல் – 1/2 கப்
வெள்ளம் – 3/4 கப் (அல்லது சுவைக்கு ஏற்ப)
ஏலக்காய் தூள் – 1/2 டீஸ்பூன்
உப்பு – ஒரு சிட்டிகை
எண்ணெய் – பொரிப்பதற்கு
செய்முறை
உளுத்தம் பருப்பு மற்றும் இட்லி அரிசியை சேர்த்து நன்கு கழுவி, குறைந்தது 3–4 மணி நேரம் தண்ணீரில் ஊறவைக்க வேண்டும். ஊறிய பிறகு மிக்ஸியில் மிகக் குறைவாகவே தண்ணீர் சேர்த்து, சற்று கனமான மற்றும் வட்டையான மாவாக அரைக்க வேண்டும். அரைத்த மாவில் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து நன்கு கலக்கவும். பிறகு வெள்ளத்தை சிறிதளவு தண்ணீரில் போட்டு உருக்கி, வடிகட்டிக் கொள்ள வேண்டும். இந்த வெள்ளத்தை ஒரு கடாயில் போட்டு கொதிக்க விடவும். வெள்ளம் கொதித்ததும் அதில் தேங்காய் துருவல் மற்றும் ஏலக்காய் தூள் சேர்த்து நன்றாக கிளறி, இந்த கலவை சூடு ஆறும் வரை வைக்க வேண்டும்.
வெள்ளம் தேங்காய் கலவை வெப்பம் குறைந்ததும், அதை அரைத்த மாவுடன் சேர்த்து நன்கு கலக்க வேண்டும். இதன் பதம் மிக அதிகமாக தளர்வாக இல்லாமல், சற்று மையமான பதத்தில் இருக்க வேண்டும். இப்போது ஒரு வாணலியில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி நன்கு காயவைக்கவும். காய்ந்த எண்ணெயில் ஒரு கைரளவு மாவை எடுத்து மெதுவாக போட்டு, எல்லாபக்கமும் பொன்னிறமாக வரும் வரை பொரிக்க வேண்டும். பின்னர் அதனை பேப்பர் மீது எடுத்து எண்ணெய் வடிக்கவிட்டு பரிமாறலாம்.
இந்த இனிப்பு போண்டா, நவராத்திரி, சரஸ்வதி பூஜை, விஜயதசமி, போன்ற திருநாள்களில் நைவேத்தியமாகவோ அல்லது சிற்றுண்டியாகவோ பரிமாற சிறந்தது!
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.