scorecardresearch

சர்க்கரை வள்ளி கிழங்கு சப்பாத்தி : இப்படி சமைத்து பாருங்க

சர்க்கரை வள்ளி கிழங்கில் வைட்டமின் ஏ, பி. சி சத்துக்கள் இருக்கிறது. மேலும் இதில் இரும்பு சத்து, பொட்டாஷியம், நார்சத்து, போன்ற எண்ணற்ற சத்துக்கள் இருக்கிறது. இது இனிப்பாக இருப்பாதால் சர்க்கரை நோயாளிகள் இதை தவிர்ப்பார்கள்.

சர்க்கரை வள்ளி கிழங்கு சப்பாத்தி : இப்படி சமைத்து பாருங்க

சர்க்கரை வள்ளி கிழங்கில் வைட்டமின்  ஏ, பி. சி சத்துக்கள் இருக்கிறது. மேலும் இதில் இரும்பு சத்து, பொட்டாஷியம், நார்சத்து,  போன்ற எண்ணற்ற சத்துக்கள்  இருக்கிறது. இது இனிப்பாக  இருப்பாதால் சர்க்கரை நோயாளிகள் இதை தவிர்ப்பார்கள். இதில் இருப்பது இயற்கையான இனிப்பு என்பதால் குறைந்த அளவில் சேர்த்துக்கொள்ளலாம். இதை வைத்து சப்பாத்தி எப்படி செய்வது என்பதை பார்க்கலாம்.

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, உப்பு, ஓமம் சேர்க்க வேண்டும். தொடர்ந்து சர்க்கரை வள்ளி கிழங்கை நன்றாக வேக வைத்து எடுத்துகொள்ளுங்கள். அதை மசித்து மாவுடன் சேர்க்க வேண்டும்.  இந்த கலவையை தண்ணீர் சேர்க்காமல் பிசைய வேண்டும். தொடர்ந்து தண்ணீர் சேர்த்து மெதுவாக பிசைய வேண்டும். கிட்டதட்ட ஒரு மணி நேரம் ஊறிய பிறகு உருண்டைகளாக செய்துகொள்ளவும். வழக்கம்போல் சப்பாத்தி போடுவதுபோல் சப்பாத்திகளை தேய்க்க வேண்டும்.    

Stay updated with the latest news headlines and all the latest Food news download Indian Express Tamil App.

Web Title: Sarkkarai valli kizhangu chapati recipe

Best of Express