பெரியவர்கள் டீ, காபிக்கு பதில் இந்த சத்து மாவை சுடு தண்ணீரில் 2 டீஸ்பூன் போட்டு கலக்கி குடிக்கலாம் என்று கூறுகிறர். இது எலும்புக்கு வலுவை அளிக்கும், உடலுக்கு சுறுசுறுப்பை அளிக்கும் என்று கூறுகிறார்.
இரும்புச்சத்து, புரதச்சத்து, கால்சியம் நிறைந்த ஒரு பவுடர் செய்து குழந்தைகளுக்கு கஞ்சி மாதிரி கொடுத்தால் என்ன நன்மைகள் என்பதை மீரான் செய்துகாட்டியுள்ளார்.
Advertisment
டெர்ரஸ் குக்கிங் யூடியூப் சேனலில் இரும்புச்சத்து, புரதச்சத்து நிறைந்த ஒரு பவுடர் செய்து குழந்தைகளுக்கு கஞ்சி மாதிரி கொடுக்கலாம் என்று மீரான் கூறுகிறார். மேலும், பெரியவர்கள் டீ, காபிக்கு பதில் இந்த சத்து மாவை சுடு தண்ணீரில் 2 டீஸ்பூன் போட்டு கலக்கி குடிக்கலாம் என்று கூறுகிறர். இது எலும்புக்கு வலுவை அளிக்கும், உடலுக்கு சுறுசுறுப்பை அளிக்கும் என்று கூறுகிறார்.
தேவையான பொருட்கள்:
Advertisment
Advertisements
கேழ்வரகு மாவு
கருப்பு உளுந்து
வெள்ளை உளுந்து
பாதம்
முந்திரி
பிஸ்தா
கருப்பு எள்ளு
வெள்ளை எள்ளு
சோம்பு
நாட்டுச் சர்க்கரை
கொழுப்பு எடுக்காத பால்
சோயா பால்
செய்முறை:
முதலில் ஸ்டவ்வைப் பற்ற வைத்து தீயை சிம்மில் வைத்துக்கொள்ளுங்கள். ஒரு கடாய் எடுத்து வைத்து, கருப்பு உளுந்து 50 கிராம் எடுத்து வறுத்து வைத்துக்கொள்ளுங்கள். வெள்ளை உளுந்து 50 கிராம் எடுத்து பொன்னிறமாக வறுத்து வைத்துக்கொள்ளுங்கள். பாதம் 75 கிராம், பிஸ்தா 50 கிராம், முந்திரி 50 கிராம் மூன்றையும் ஒன்றாக சேர்த்து வறுத்து எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். இதில் பிஸ்தா தோல் நீக்கிவிடுங்கள்.
கருப்பு எள்ளு 25 கிராம், வெள்ளை எள்ளு 25 கிராம், சோம்பு 1 டேபிள்ஸ்பூன் போட்டு வறுத்து எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்.
இதை எல்லாவற்றையும் மிக்ஸியில் போட்டு அரைத்துக் எடுத்துக் கொள்ளுங்கள்.
கடாய் சூடு ஆற வேண்டும். கேழ்வரகு மாவு கடாயில் போட்டு வறுத்து எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். வறுத்த கேழ்வரகு மாவை மிக்சியில் அரைத்து வைத்துள்ள மாவுடன் சேர்த்து நன்றாகக் கலந்துவிடுங்கள். இதை காற்று புகாமல் ஒரு டப்பாவில் போட்டு மூடி வைத்துக்கொள்ளுங்கள்.
இதை தண்ணீரை கொதிக்க விடாமல் சூடு படுத்தி, அதில் 2 ஸ்பூன் மாவைப் போட்டு நன்றாகக் கலக்கிவிடுங்கள். கூழ் போன்ற பதம் வந்துவிடும். இதனுடன் ஒரு பெரிரிய கிளாஸ் பால் ஊற்றி நன்றாகக் கலக்கிவிடுங்கள். இதனுடன் நாட்டுச் சர்க்கரை போட்டு கலந்து குடிக்கலாம்.
இந்த சத்துமாவு பானம் உடலுக்கு தேவையான இரும்புச் சத்த், புரோட்டின், கால்சியம், விட்டமின்களை அளிக்கும். எலும்பை வலுவாக்கும், உடலை சுறுசுறுப்பாக வைத்திருக்கும் என்று மீரான் கூறுகிறார்.