ஹோட்டல் ஸ்டைலில் வீட்டில் குழந்தைகள் நூடுல்ஸ் கேட்குறாங்களா அப்போ இந்த மாதிரி செய்து கொடுங்கள். கப் மொத்தமும் காலியாகிடும். ஈஸியான செஸ்வான் நூடுல்ஸ் செய்வது பற்றி ஹோம் குக்கிங் யூடியூப் பக்கத்தில் செய்து காட்டியிருப்பதாவது,
தேவையான பொருட்கள்
நூடுல்ஸ்
எண்ணெய்
பூண்டு
இஞ்சி
வெங்காயம்
கேரட்
பச்சை குடமிளகாய்
சிவப்பு குடமிளகாய்
முட்டைக்கோஸ்
காளான்
உப்பு
மிளகு
சோயா சாஸ்
ஷெஸ்வான் சாஸ்
வெங்காய தாள்
செய்முறை
நூடுல்ஸை கொதிக்கும் நீரில் 5-7 நிமிடங்கள் வேகவைத்து வடிகட்டவும். நூடுல்ஸ் ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் இருக்க குளிர்ந்த நீர் ஊற்றி நூடுல்ஸை ஒதுக்கி
வைக்கவும்.
அகலமான வாணலியை எடுத்து எண்ணெய் சேர்க்கவும். அதை சூடாக்கவும். நறுக்கிய பூண்டு, இஞ்சி சேர்த்து வதக்கவும். நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து 30 விநாடிகள் வதக்கவும்.
தீயை மிதமான அளவில் வைக்கவும். கேரட், பச்சை குடமிளகாய், சிவப்பு குடைமிளகாய், துருவிய முட்டைக்கோஸ், துண்டுகளாக்கப்பட்ட காளான்கள் சேர்த்து 1-2 நிமிடம் வதக்கவும்.
செஸ்வான் நூடுல்ஸ் | Schezwan Noodles in tamil | Veg Noodles Recipe
உப்பு, கருப்பு மிளகு தூள், சோயா சாஸ், ஷெஸ்வான் சாஸ் சேர்த்து நன்கு கலக்கவும். அடுப்பை மிதமான சூட்டில் வைத்து, சமைத்த நூடுல்ஸை சேர்க்கவும். காய்கறிகள் மற்றும் சாஸ்களுடன் நன்றாக கலக்கவும்.
இறுதியாக நறுக்கிய ஸ்ப்ரிங் ஆனியன் கீரைகள் மற்றும் ஒயிட்ஸைச் சேர்க்கவும். அவ்வளவு தான் சுவையான ஷெஸ்வான் நூடுல்ஸ் ரெடி.