கடைகளில் கிடைப்பது மாதிரி செஸ்வான் பன்னீர் வீட்டிலேயே எப்படி செய்வது என்று பார்ப்போம். மிகவும் குறைவான பொருட்களை வைத்து சுவையான பன்னீர் செய்வது பற்றி ஹோம் குக்கிங் தமிழ் யூடியூப் பக்கத்தில் செய்து காட்டியிருப்பது பற்றி பார்ப்போம்.
Advertisment
தேவையான பொருட்கள்
பன்னீர் - 400 கிராம் செஸ்வான் சாஸ் உப்பு - 1 தேக்கரண்டி கொத்தமல்லி இலை மைதா - 3 தேக்கரண்டி சோள மாவு - 3 தேக்கரண்டி எண்ணெய் - 3 தேக்கரண்டி பூண்டு - 1 மேசைக்கரண்டி நறுக்கியது இஞ்சி - 1 மேசைக்கரண்டி நறுக்கியது பச்சை மிளகாய் - 1 நறுக்கியது பச்சை குடைமிளகாய் - 1/2 நறுக்கியது வெங்காயம் - 1/2 நறுக்கியது சிவப்பு குடைமிளகாய் - 1/2 நறுக்கியது செஸ்வான் சாஸ் - 1 தேக்கரண்டி சோயா சாஸ் - 1 1/2 மேசைக்கரண்டி தக்காளி கெட்சப் - 1 1/2 மேசைக்கரண்டி உப்பு - 1/4 தேக்கரண்டி மிளகு தூள் - 1/4 தேக்கரண்டி வெங்காயத்தாள் கீரை வெள்ளை எள்ளு
செய்முறை
Advertisment
Advertisements
பன்னீரை எடுத்து கைகளால் உதிர்த்து செஸ்வான் சாஸ், உப்பு, நறுக்கிய கொத்தமல்லி இலை, மைதா, சோள மாவு சேர்த்து நன்கு கலக்கவும். இதனை பின்னர் உருண்டைகளை தயார் செய்யலாம்.
உள்ளங்கையில் சிறிது எண்ணெய் தடவி, கலவையின் ஒரு சிறிய பகுதியை எடுத்து உங்கள் உள்ளங்கைகளுக்கு இடையில் உருட்டவும். சிறிய அளவிலான உருண்டைகளாக வடிவமைக்கவும். அனைத்து உருண்டைகளையும் இதே முறையில் தயார் செய்து தனியாக வைக்கவும்.
ஒரு தட்டில் சிறிது சோள மாவை சமமாக பரப்பவும். பன்னீர் உருண்டைகளை சோள மாவில் உருட்டவும். இப்போது ஒரு கடாயில் வறுக்க போதுமான எண்ணெய் சேர்க்கவும். எண்ணெய் சூடானதும், பன்னீர் உருண்டைகளை மெதுவாக சேர்த்து பொரித்தெடுக்கவும்.
ஒரு அகலமான கடாயில் எண்ணெய், நறுக்கிய பூண்டு, இஞ்சி, பச்சை மிளகாய், வெங்காயம், பச்சை குடைமிளகாய், சிவப்பு குடைமிளகாய் சேர்த்து வதக்கவும். செஸ்வான் சாஸ், சோயா சாஸ், தக்காளி கெட்சப், உப்பு, மிளகு தூள் சேர்த்து நன்கு கலக்கவும். சிறிது தண்ணீர் சேர்த்து சமைக்கவும்.
சோள மாவு கலவை சேர்த்து மீண்டும் கலக்கவும். இதில் நறுக்கிய வெங்காயத்தாள் கீரை, வறுத்த பன்னீர் உருண்டைகளை சேர்த்து கலந்து விடவும். சிறிது வெள்ளை எள்ளு தூவவும். அவ்வளவு தான் காரமான செஸ்வான் பன்னீர் சூடாக பரிமாற தயாராக உள்ளது.