ஸ்கூல் லஞ்ச் பாக்ஸ் ரெசிபி: இப்படி செஞ்சு குடுங்க; சத்தமே இல்லாம சாப்பிடுவாங்க!

பள்ளிக்கு போற பிள்ளைகள் சாப்பிடுவதே இல்லை என கவலைப்படும் பெற்றோர்கள் மதிய உணவுக்கு இந்த மாதிரி ஒரு டிஷ் செய்து கொடுங்கள் வேண்டாம் என்று சொல்லாமல் பிள்ளைகள் மொத்த சாப்பாட்டையும் சாப்பிட்டு விடுவார்கள்.

பள்ளிக்கு போற பிள்ளைகள் சாப்பிடுவதே இல்லை என கவலைப்படும் பெற்றோர்கள் மதிய உணவுக்கு இந்த மாதிரி ஒரு டிஷ் செய்து கொடுங்கள் வேண்டாம் என்று சொல்லாமல் பிள்ளைகள் மொத்த சாப்பாட்டையும் சாப்பிட்டு விடுவார்கள்.

author-image
WebDesk
New Update
potato fry

காலை அவசரத்தில் தினசரி லஞ்ச் பாக்ஸ் ரெசிபி என்ன செய்வது என்ற குழப்பமா? கவலையை விடுங்கள்! ஷரீன்ஸ் கிச்சன் உங்களுக்கு அற்புதமான ஒரு தீர்வைக் கொண்டு வந்துள்ளது. ஷரீன்ஸ் கிச்சன் சமையல்காரர், தனது குழந்தைப் பருவத்திலிருந்தே தனது பிள்ளைகளுக்குப் பிடித்தமான லெமன் சாதம் மற்றும் உருளைக்கிழங்கு வறுவலை எப்படி செய்வது என்று விளக்குகிறார். கல்லூரி செல்லும் பிள்ளைகள் கூட இந்த காம்பினேஷனை மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்.

Advertisment

தேவையான பொருட்கள்:

உருளைக்கிழங்கு - 3 (சிறிய துண்டுகளாக வெட்டியது)
எண்ணெய் - 2 ஸ்பூன்
பூண்டு - 4-5 பல் (நசுக்கியது)
கறிவேப்பிலை - சிறிதளவு
மஞ்சள் தூள் - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
மிளகாய் தூள் - 1/2 ஸ்பூன்
மல்லித்தூள் - 1/4 ஸ்பூன்
கரம் மசாலா - 1/4 ஸ்பூனுக்கும் குறைவான அளவு

செய்முறை:

Advertisment
Advertisements

ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். நசுக்கிய பூண்டு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து பச்சை வாடை போக வதக்கவும். வெட்டிய உருளைக்கிழங்கு துண்டுகளைச் சேர்த்து, மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கலக்கவும்.

தண்ணீர் சேர்க்காமல், அடுப்பை சிம்மில் வைத்து, கடாயை மூடி போட்டு வேக விடவும்.
உருளைக்கிழங்கு நன்கு வெந்து, மொறுமொறுப்பான பதம் வரும் வரை அவ்வப்போது கிளறி விடவும். உருளைக்கிழங்கு வெந்ததும், மிளகாய் தூள், மல்லித்தூள், மற்றும் கரம் மசாலா சேர்த்து 30-40 வினாடிகள் நன்கு வறுக்கவும்.

தேவையான பொருட்கள்:

சாதம் - தேவையான அளவு  
எண்ணெய்  
கடுகு உளுந்து - 1/2 ஸ்பூன்
பச்சை மிளகாய் - 2 (நறுக்கியது)
பூண்டு - 4-5 பல் (நசுக்கியது)
கறிவேப்பிலை - சிறிதளவு
மஞ்சள் தூள் - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
எலுமிச்சம் பழம் - 3 (சாறு எடுத்தது)

செய்முறை:

ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடாக்கி, கடுகு உளுந்து சேர்த்து பொரிய விடவும்.
கடுகு பொரிந்ததும், பச்சை மிளகாய், நசுக்கிய பூண்டு, கறிவேப்பிலை, மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு தாளிக்கவும்.

தாளிப்பு நன்கு பொரிந்ததும், அடுப்பை அணைத்துவிட்டு உப்பு சேர்க்கவும். கடாயின் சூடு தணிந்ததும், எலுமிச்சம் பழச்சாறை சேர்த்து நன்கு கலக்கவும். இறுதியாக, ஆறவைத்த சாதத்தை சேர்த்து, அனைத்தும் நன்கு கலக்கும்படி கிளறவும்.

Cooking Tips

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: