மாம்பழம் சீசன் வந்துவிட்டது; இனி வீட்டில் மாம்பழம் வைத்து சுவையான இந்த ஸ்வீட் செய்யுங்கள்

மாம்பழம் சீசன் வந்துவிட்டதா அப்போ சாப்பிட்டது போக மீதியாகும் மாம்பழத்தில் சுவையான ஒரு ஸ்வீட் செய்யலாம்.

மாம்பழம் சீசன் வந்துவிட்டதா அப்போ சாப்பிட்டது போக மீதியாகும் மாம்பழத்தில் சுவையான ஒரு ஸ்வீட் செய்யலாம்.

author-image
WebDesk
New Update
mango pudding

மாம்பழம் சீசனுக்கு ஏற்ற மாம்பழம் புட்டிங்

மாம்பழம் சீசன் வரப்போகிறது. இனி அனைவரும் வீட்டில் மாம்பழம் வாங்க ஆரம்பித்து விடுவீர்கள். ஆசைத்தீர சாப்பிட்டது போக மீதம் இருக்கும் மாம்பழத்தில் மாம்பழம் புட்டிங் செய்து சாப்பிடுங்கள். வெயில் நேரத்தில் மாம்பழம் புட்டிங் இனிப்பாக குளிங்காக இருக்கும். சுவையான மாம்பழ புட்டிங் செய்வது பற்றி ஹோம் குக்கிங் யூடியூப் பக்கத்தில் கூறியிருப்பதாவது,

Advertisment

தேவையான பொருட்கள்

மாம்பழம் 
சர்க்கரை
சீனா கிராஸ் 
கிரீம்  
பால்

செய்முறை 

Advertisment
Advertisements

முதலில் மாம்பழங்களை எடுத்து கழுவிக்கொண்டு அதன் தோல்களை நீக்க வேண்டும். அதன் பின்பு மாம்பழங்களை சிறிய துண்டுகளாக வெட்டி மிக்ஸியில் சேர்த்து அதனுடன் சர்க்கரை சேர்த்து அரைத்துக்கொள்ளவும். 

அரைத்த மாம்பழங்களை ஒரு கடாயில் வடிகட்டி அதை சிறிது நேரம் வேகவைக்கவும். மற்றொரு பாத்திரத்தில் சைனா கிராஸ் மற்றும் தண்ணீர் சேர்த்து கரைத்து வைக்கவும். இந்த கரைத்த சைனா கிராஸை வேகவைத்த மாம்பழ கலவையில் சேர்த்து நன்கு கலக்கவும்.

மாம்பழ புட்டிங் | Mango pudding Recipe in Tamil

அடுத்து இந்த மாம்பழம் மிக்ஸிங்கில் ப்ரெஷ் கிரீம் மற்றும் பால் சேர்த்து கலக்கவும். தயாரான மாம்பழ மிக்ஸிங்கை ஒரு பாத்திரத்தில் ஊற்றி காற்று புகாதவாறு  பிரிட்ஜில் எட்டு மணி நேரம் வைக்கவும். 

எட்டுமணி நேரம் கழித்து எடுத்து மேலே மாம்பழம் அறுத்து போட்டு புதினா இலைகளை தூவி குடிக்கலாம்.

Benefits of drinking mango juice during summer Cooking Tips

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: