நம் அன்றாட வாழ்வில் தக்காளி இல்லாத சமையலே இல்லை. தக்காளியை உணவின் சுவையை அதிகப்படுத்துவதற்காக சேர்க்கிறோம். ஆனால் அந்த தக்காளியில் நம் உடலுக்கு தேவையான சத்துக்கள் ஏராளமாக இருக்கின்றது.
சில சமயங்களில் விலை கூடினால் கூட அதை அவசியமாக வாங்கிவந்து சமையலுக்கு சேர்த்துக் கொள்வோம். சமையலுக்கு ருசியை கொடுக்க அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த தக்காளியை சுவைக்காக மட்டுமல்ல ஆரோக்கியத்திற்காகவும் அதனை எடுத்து கொள்ளலாம். அப்படி நம் உயிர்கொல்லி நோயாக இருக்கும் புற்றுநோய் வராமல் தடுக்க தக்காளி பழம் கட்டாயம் சாப்பிட வேண்டும்.
தக்காளியில் உள்ள சத்துக்கள்
தக்காளியில் வைட்டமின் ஏ, சி,பி,பி6, கால்சியம், நார்ச்சத்து, பாஸ்பரஸ், இரும்புச்சத்து, மாவுச்சத்து, ஃபோலேட், சாச்சுரேட்டட் கொழுப்பு, நியாசின் உயிர்ச்சத்து, மக்னீசியம், பாஸ்பரஸ், தாமிரம் போன்ற சத்துக்கள் இந்த தக்காளியில் அடங்கியுள்ளது. தக்காளியில் கலோரிகள் குறைந்த அளவில் இருக்கின்றது. இதில் மாவுச்சத்து குறைவாக உள்ளதால் சர்க்கரை நோயாளிகளும் சாப்பிடலாம்.
தக்காளியின் பயன்கள்
புற்றுநோய்: தக்காளிக்கு இயற்கையாகவே புற்றுநோய் வராமல் தடுக்கும் சக்தி உள்ளது. நம் உடம்பில் உள்ள அணுக்களை பாதிப்பில் இருந்து பாதுகாக்கும் வைட்டமின் ஏ, சி போன்ற ஆன்டி-ஆக்சிடன்ட்கள் தக்காளியில் அதிக அளவு உள்ளது. இதனால் கர்ப்பப்பை புற்றுநோய், புரோஸ்டேட் புற்றுநோய், தொண்டை புற்றுநோய், வாய் புற்றுநோய், உணவுக் குழாய் புற்றுநோய், வயிற்று புற்றுநோய், குடல் புற்றுநோய், கருப்பை புற்றுநோய் வராமல் தடுக்க உதவும்.
மேலும் தக்காளி பழத்தின் மேல் தூள் புற்றுநோயை தடுக்கும் சக்தி கொண்டது. மாதுளையின் சிவப்பு நிறம் மற்றும் மாப்பிளை சம்பா அரிசியின் மேல் உள்ள சத்துக்களும் புற்றுநோய் வராமல் தடுக்க உதவுகிறது. மேலும் புளிக்கு மாற்றாக தக்காளி பழத்தை உணவில் சேர்த்து கொள்ளலாம்.
இதை தினமும் உணவில் சேர்த்து கொள்ளுங்கள் | Dr.Sivaraman speech on tomato health benefits
தக்காளி பழத்தின் பொதுவான நன்மைகள் என்ன என்று நாம் அனைவரும் அறிந்ததே பளபளப்பான சருமத்திற்கு தக்காளியில் பீட்டா கரோட்டின் அளவு அதிகமாக உள்ளது. இது நம் சருமத்தை சூரிய வெப்பத்திலிருந்து பாதுகாக்கும். நம் சருமம் சுருக்கத்தில் இருந்து நீங்கவும், எண்ணெய் வழியாமல் இருக்கவும் முகம் பளபளப்பு தன்மையை பெறவும் உதவுகிறது.
எலும்பு உறுதி: எலும்புகள் உறுதியாக இருக்க வைட்டமின் கே மற்றும் கால்சியம் சத்து தக்காளி பழத்தில் அதிக அளவில் உள்ளது. இதை தினந்தோறும் நாம் சாப்பிட்டு வருவதன் மூலம் நம் எலும்புகள் உறுதியாகும். மூட்டு வலி, எலும்பு தேய்மானம் போன்ற பிரச்சனைகளும் வராமல் தடுக்கும்.
சர்க்கரை நோய்: தக்காளியில் குரோமியம் அதிகமாக உள்ளதால் நம் ரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்த உதவுகிறது.
இதுபோன்ற பல நன்மைகள் தக்காளியில் உள்ளது. முக்கியமாக சிறுநீரக பிரச்சனை உள்ளவர்கள் தக்காளியை தவிர்ப்பது நல்லது.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“