தென் இந்தியாவின் தினசரி உணவான இட்லி பலருக்கும் பிடித்தமான ஒன்றாக இருக்கிறது. ஆனால், இந்த இட்லியை பிடிக்கும் விதமாக சாஃப்ட்டாக செய்ய வேண்டும் என்றால் அதற்கு நிறைய மெனக்கெட வேண்டும். ரேஷன் அரிசியிலும் சாஃப்ட் இட்லி செய்யலாம் என்று பலரும் ஆளுக்கொரு டிப்ஸ் சொல்கிறார்கள். சாஃப்ட் இட்லி செய்ய வேண்டும் என்றால், அரிசியையும் உளுந்தையும் தனித் தனியாக ஊறவைத்து அரைக்க வேண்டும் என்பதுதான் பலரும் சொல்லும் டிப்ஸ். ஆனால், சாஃப்ட் இட்லி செய்ய வேண்டும் என்றால் அரியையும் உளுந்தையும் தனியாக ஊற வைக்க வேண்டாம் இப்படி செய்யுங்கள் என்று ஒரு புது டிப்ஸை உங்களுக்காக இங்கே தருகிறோம். இப்படி செய்தால், அரியையையும் உளுதையும் தனித் தனியாக ஊற வைக்க வேண்டியதில்லை. ரேஷன் அரிசியில் சாஃப்ட் இட்லி செய்யும் ரகசியம் இதுதான் தெரிந்துகொள்ளுங்கள்.
முதலில் 3 கப் ரேஷன் புழுன்கல் அரிசி எடுத்துக்கொள்ளுங்கள். 1 கப் பச்சரிசி எடுத்துக்கொள்ளுங்கள். 1 கப் உளுந்து எடுத்துக்கொள்ளுங்கள். இந்த முன்றையும் ஒன்றாகப் போட்டு கலந்து நன்றாகக் கழுவி சுத்தம் செய்து வைத்துக்கொள்ளுங்கள்.
அடுத்து ஒரு பாத்திரத்தில் நன்றாக தண்ணீரை கொதிக்க வைத்துக்கொள்ளுங்கள். தண்ணீர் நன்றாக சலச்சலவென கொதித்த பிறகு, அதை எடுத்து கழுவி வைத்துள்ள அரிசி, உளுந்துவில் ஊற்றுங்கள். இப்போது அப்படியே ஒரு மூடி போட்டு 4 மணி நேரம் ஊற விடுங்கள். நன்றாக ஊறிய பிறகு, எடுத்து பார்த்தால் அரிசி ரொம்ப சாஃப்ட்டாக ஊறி இருக்கும். இப்போது, இந்த தண்ணீரை வடி கட்டிவிடுங்கள். ஊறிய அரிசி உளுந்தை கிரைண்டரில் அரைக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. நீங்கள் மிக்ஸியிலேயே அரைத்துக்கொள்ளலாம்.
அரைக்கும்போது, ஒவ்வொரு ஜாருக்கும் ஒரு கால் கப் சோறு சேர்த்துக்கொள்ளுங்கள், சோறு சேர்க்க விரும்பாதவர்கள், கால் கப் அவல் சேர்த்துகொள்ளுங்கள். அரைத்து முடித்ததும் மாவை வழக்கம் போல மூடி புளிக்க வையுங்கள். காலையில் எடுத்து பார்த்தால் நன்றாக புளித்து வந்திருக்கும்.
இப்போது இட்லி குண்டானில் தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்க வையுங்கள். அதன் பிறகு, மாவை எடுத்து தட்டில் ஊற்றி வைத்து மூடி அவியுங்கள். இட்லி வெந்த பிறகு எடுத்து பாருங்கள். செம சாஃப்ட்டாக இருக்கும்.