ஹோட்டல் பாணியில் மிருதுவான சப்பாத்தி தயாரிக்க என்ன வழிகள் என்று டீக்கடை கிச்சன் யூடியூப் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளன. வழக்கமாக நாம் வீட்டில் செய்யும் சப்பாத்திக்கும், ஹோட்டல் சப்பாத்திக்கும் உள்ள வித்தியாசத்தை இதன் மூலம் அறிந்து கொள்ளலாம். மேலும் சப்பாத்தி சூடு ஆறினால் கூட சாஃப்ட் ஆக இருக்கும்.
Advertisment
தேவையான பொருட்கள்:
கோதுமை மாவு: 1/2 கிலோ மைதா மாவு: 2 டேபிள்ஸ்பூன் கொண்டைக்கடலை மாவு: 50 கிராம் (கருப்பு கொண்டைக்கடலையை அரைத்தது) உப்பு: 3/4 டீஸ்பூன் சர்க்கரை: 1 டீஸ்பூன் வெதுவெதுப்பான நீர்: தேவையான அளவு எண்ணெய்: 1 டேபிள்ஸ்பூன் + மாவு மீது தடவ சிறிதளவு
செய்முறை:
Advertisment
Advertisements
ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, மைதா மாவு, கொண்டைக்கடலை மாவு ஆகியவற்றைச் சேர்த்து நன்றாக கலக்கவும். கலந்த மாவின் நடுவில் சிறு குழி செய்து, உப்பு மற்றும் சர்க்கரையை சேர்க்கவும். வெதுவெதுப்பான நீரை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து, மாவை கெட்டியாகப் பிசையவும். சப்பாத்தி மாவை எவ்வளவு நன்றாக பிசைகிறோமோ, அந்த அளவுக்கு சப்பாத்தி மிருதுவாக வரும்.
மாவை நன்றாக பிசைந்த பிறகு, அதன் மீது சிறிதளவு எண்ணெய் தடவி, அரை மணி நேரம் மூடி ஊறவைக்கவும். ஊறிய பிறகு மாவு பளபளப்பாக மாறும். அரை மணி நேரம் ஊறிய பிறகு, மாவை மீண்டும் ஒருமுறை நன்றாக அடித்து பிசையவும். பிசைந்த மாவை உங்களுக்கு தேவையான அளவுக்கு உருண்டைகளாக உருட்டி கொள்ளவும். சப்பாத்தி தேய்க்கும் பலகையில் லேசாக மைதா மாவை தூவி, உருண்டைகளை மெல்லியதாக தேய்க்கவும்.
மெல்லிதாக தேய்த்தால் சப்பாத்தி மென்மையாக வரும். கல்லை நன்றாக சூடாக்கி, தேய்த்த சப்பாத்திகளை எண்ணெயில்லாமல் போட்டு சுடவும். சப்பாத்தியை திருப்பித் திருப்பிப் போட்டு வேகவிடவும். ஓரிரு முறை திருப்பிப் போட்டவுடன் சப்பாத்தி புசுபுசுவென உப்பி வரும். அதிக நேரம் விடாமல், லேசாக டாட் டாட்டாக வந்தவுடன் திருப்பிப் போட்டு வேகவைத்து எடுக்கவும். இந்த முறையில் தயாரிக்கப்பட்ட சப்பாத்திகள் மிருதுவாகவும், பூ போலவும் இருக்கும். இதற்கு தொட்டுக்கொள்ள வெஜ் குருமா போன்ற சைடிஷ்களை பயன்படுத்தலாம்.