தயிர் சாதத்துக்கு ஓமம்; இட்லி பொடிக்கு கொப்பரை தேங்காய்... இன்றைய டாப் குக்கிங் டிப்ஸ்; சீக்கிரம் நோட் பண்ணுங்க!

எப்போதும் சமைக்கும் சாப்பாடு தான் ஆனால் அதில் கொஞ்சம் சுவையை கூட்ட வேண்டியது அவசியம். அப்போ தான் சமைத்த சாப்பாடு காலியாக வாய்ப்பு உள்ளது.

எப்போதும் சமைக்கும் சாப்பாடு தான் ஆனால் அதில் கொஞ்சம் சுவையை கூட்ட வேண்டியது அவசியம். அப்போ தான் சமைத்த சாப்பாடு காலியாக வாய்ப்பு உள்ளது.

author-image
WebDesk
New Update
இட்லி பொடி

சமையல் என்பது எல்லோருக்கும் பிடிக்கும். சிலருக்கு சாப்பிட பிடிக்கும் சிலருக்கு சமைக்க பிடிக்கும். ஆனால் இறுதியாக அனைவருக்கும் சமையல் பிடித்து விடும். நம்மில் நிறைய பேருக்கு ருசியான புதுபுது உணவுகளை தேடி சாப்பிடுவது என்பது இருக்கும். நிறைய கடைகள் நிறைய ஊர்களில் இருக்கும் உணவுகளை சுவைக்க தோன்றும். 

Advertisment

அப்படியாக உணவு மீது அதீத காதல் கொண்டவர்கள் தான் இங்கு அதிகம் இருப்பார்கள். அவர்களில் பலர் இப்போது புதுசு புதுசான உணவுகளை எப்படி சமைப்பது என்று தேடி பிடித்து சமைத்து சாப்பிடுகின்றனர். அப்படியாக நாம் உணவுகளை எடுத்தோம் என்றால் எல்லாம் நமக்கு சமைக்க தெரிந்த உணவுகளாக தான் இருக்கும் ஆனால் அதனை எப்படி சுவையாக சமைப்பது என்று தான் நமக்கு தெரியாது.

இப்படியாக நாம் சமைக்கும் சாப்பாட்டில் கவனிக்க வேண்டிய முக்கியமான சிலவற்றை பார்ப்போம். இதனை கூட்ட குறைத்து சேர்த்தாலே சாதம் ருசியாக இருக்கும். 

டிப்ஸ் 1: தயிர் சாதம் செய்யும்போது கடுகுக்கு பதில் ஓமம் சேர்த்தால் மணமாகவும், சுவையாகவும் இருக்கும். அஜீரணப் பிரச்னைகளையும் சரிசெய்யும்.

Advertisment
Advertisements

டிப்ஸ் 2: வெந்தயத்தை ஊறவைத்து மிக்ஸியில் அரைத்து அதை மோருடன் கலந்து குடிக்கலாம். சூடு தணியும். 

டிப்ஸ் 3: மிளகாயை உப்பில் ஊறவைத்து காயவைத்து பின் பொறித்தால் வாசனையாகவும், காரம் குறைந்தும் இருக்கும். இதேபோல் பாகற்காய், சுண்டைக்காய், கோவக்காயிலும் செய்யலாம்.

டிப்ஸ் 4:  சர்பத், ஜூஸ் தயாரிக்கும்போது வெறும் ஐஸ்கட்டிக்கு பதிலாக புதினாசாறு, எலுமிச்சைசாறு, இஞ்சி சாறு, உப்பு சேர்த்து ஐஸ் க்யூப்ஸாக தயாரித்து, அதை போட்டு குடித்தால் சுவையாக புத்துணர்ச்சியாக இருக்கும்.

டிப்ஸ் 5: சாம்பார் செய்ய்ம்போது புளிக்கு பதில் நன்கு பழுத்த தக்காளியை அரைத்து சேர்த்தால் சாம்பார் நிறமாகவும், மணமாகவும் இருக்கும்.

டிப்ஸ் 6: இட்லி மிளகாய்பொடி அரைக்கும்போது கொப்பரை தேங்காய் துருவல் சேர்த்தால் சுவையாக இருக்கும்.

டிப்ஸ் 7: மாம்பழத்தை சாப்பிடும் முன் தண்ணீரில் போட்டு வைத்திருந்து பின் நறுக்கினால் ஒரே மாதிரியாக வரும். பழுக்காத மாம்பழத்தை பிரெளன் கவரில் போட்டு ஒரு பழுத்த பழத்தையும் சேர்த்து மூடிவைக்க விரைவில் பதமாக பழுக்கும்.

Cooking Tips Kitchen Hacks In Tamil

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: