எண்ணெய் குடிக்காத மொறு மொறு வடை…மிக்ஸியில் அரைத்து செய்யலாம்; சீக்ரெட் இதுதான்!
எண்ணெய் குடிக்காத வடை ஈஸியாக எப்படி செய்வது என்று பார்ப்போம். இந்த மாதிரி செஞ்சா கொஞ்சம் கூட எண்ணெய் குடிக்காது. வடை எப்படி செய்வது என்று இந்தியன் ரெசிப்பீஸ் தமிழ் யூடியூப் பக்கத்தில் செய்து காட்டியிருப்பது பற்றி பார்ப்போம்.
எண்ணெய் குடிக்காத வடை ஈஸியாக எப்படி செய்வது என்று பார்ப்போம். இந்த மாதிரி செஞ்சா கொஞ்சம் கூட எண்ணெய் குடிக்காது. வடை எப்படி செய்வது என்று இந்தியன் ரெசிப்பீஸ் தமிழ் யூடியூப் பக்கத்தில் செய்து காட்டியிருப்பது பற்றி பார்ப்போம்.
கோடை விடுமுறை விட்டாச்சு இனி பிள்ளைகள் எதாவது ஸ்நாக்ஸ் செய்து கொடுக்க சொல்லி கேட்க ஆரம்பித்து விடுவார்கள். தினமும் ஒரு ஸ்நாக்ஸ் செய்து கொடுக்க வேண்டிய நேரம் வந்து விட்டது. அதனால் இனி விதவிதமான ஸ்நாக்ஸ் செய்ய கற்றுக்கொள்ளுங்கள்.
Advertisment
அதுவும் பிள்ளைகளுக்கு ஹெல்தியாகவும் கடைகளில் கிடைப்பது போன்றும் செய்து கொடுக்க கற்றுக்கொள்ளுங்கள். கேக், முறுக்கு, ஜூஸ், பர்பி என பலவகையான் ஸ்நாக்ஸ் வகைகள் உள்ளது. அதை எல்லாம் செய்வதை விட பிள்ளைகளுக்கு பிடித்த மாதிரி செய்வது தான் டாஸ்க்.
எண்ணெய் குடிக்காமல் ஈஸியாக வடை செய்வது என்பது சற்று கடினமாக வேலை தான் ஆனால் ஒருமுறை செய்ய கற்றுக்கொண்டால் போதும் இனி அடிக்கடி எண்ணெய் குடிக்காத வடை செய்வீர்கள். அப்படி எண்ணெய் குடிக்காத வடை எப்படி செய்வது என்று இந்தியன் ரெசிப்பீஸ் தமிழ் யூடியூப் பக்கத்தில் செய்து காட்டியிருப்பது பற்றி பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
Advertisment
Advertisements
உளுந்து - 1 கப் கொத்தமல்லி இலைகள் கறிவேப்பிலைகள் வெங்காயம் - 1 பச்சை மிளகாய் - 2 உப்பு எண்ணெய் அரிசி மாவு - 2 ஸ்பூன் மிளகு - 1 ஸ்பூன்
செய்முறை:
கழுவிய உளுத்தம்பருப்பை ஊறவைத்து, விழுதாக அரைக்கவும். பின்னர் இதனை ஒரு பாத்திரத்திற்கு மாற்றி நன்றாக கலக்கவும். கொத்தமல்லி தழை, நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை, உப்பு, மிளகுத்தூள், அரிசி மாவு, பச்சை மிளகாய் சேர்த்து நன்கு கலக்கவும். அடுத்ததாக இதை வடை வடிவில் தட்டி சூடான எண்ணெயில் பொரித்தெடுக்கவும். மிதமான தீயில் நிறம் மாறும் வரை வறுத்து பின் எடுக்கவும். அவ்வளவு தான் மிதமான தீயில் சுடும்போது சுவையான மொறு மொறு மெது வடை தயாராகிவிடும்.