ஒரு முறை இந்த இலங்கையின் பேமஸ் சீனி சம்பல் ரெசிபியை, வீட்டில் செய்து பாருங்க.
தேவையான பொருட்கள்
அரை கிலோ வெங்காயம் நறுக்கியது
கடலை எண்ணெய் 3 ஸ்பூன்
பட்டை 1 துண்டு
10 ஏலக்காய்
கருவேப்பிலை 1 கொத்து
10 எம்.எல் புளி தண்ணீர் ( 75 கிராம் புளி)
உப்பு தேவையான அளவு
50 கிராம் சர்க்கரை
அரை ஸ்பூன் காஷ்மீரி மிளகாய் பொடி
செய்முறை : வெங்காயத்தை நீளமாக நறுக்க வேண்டும். இதை பாத்திரத்தில் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். இதை தனியாக எடுத்து வைத்துகொள்ளுங்கள். ஒரு பாத்திரத்தில் எண்ணெய் சேர்த்து பட்டை, ஏலக்காய் சேர்த்து கிளரவும். தொடர்ந்து கருவேப்பிலை சேர்க்கவும். புளி தண்ணீர் சேர்த்து கிளரவும். உப்பு சேர்த்து கிளரவும். தொடர்ந்து சர்க்கரை சேர்த்து கிளரவும். நன்றாக கிளர வேண்டும். மிளகாய் பொடி சேர்க்கவும். தொடர்ந்து வெங்காயத்தை சேர்த்து நன்றாக கிளர வேண்டும். 10 நிமிடம் வரை சமைக்க வேண்டும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“