/indian-express-tamil/media/media_files/2025/03/31/dgoiFB6v8GgHGNOfPnIm.jpg)
சீந்தில் இலைகள் பார்ப்பதற்கு இதய வடிவத்தில் இருக்கும். இதில் பல்வேறு மருத்துவ குணங்கள் நிறைந்து இருக்கின்றன என்று மருத்துவர் மைதிலி தெரிவித்துள்ளார். குறிப்பாக, சர்க்கரை நோயாளிகளுக்கு இது மருந்தாக பயன்படுகிறது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதன்படி, இந்த சீந்தல் இலையில் தேநீர் தயாரித்து குடித்தால், சர்க்கரை நோயாளிகளின் இரத்தத்தில் இருக்கும் சுகரின் அளவு படிப்படியாக குறைந்து கட்டுப்பாட்டிற்கு வரும் என்று மருத்துவர் மைதிலி பரிந்துரைக்கிறார்.
மூன்று மாதத்திற்கு ஒரு முறை சர்க்கரை பரிசோதனை மேற்கொள்ளும் போது கூட, அதனை சீராக பராமரிக்கும் ஆற்றல் இந்த சீந்தில் இலை தேநீருக்கு இருப்பதாக கூறப்படுகிறது. இது தவிர மூட்டுப் பகுதியில் ஏற்படும் வலி மற்றும் வீக்கத்தையும் குறைக்க இது உதவுகிறது.
அந்த வகையில் இந்த சீந்தில் இலை தேநீரை தொடர்ந்து 90 நாட்களுக்கு எடுத்துக் கொள்ளலாம் என்று மருத்துவர் மைதிலி பரிந்துரைக்கிறார். அதற்கு மேல் இதனை எடுத்துக் கொள்ளலாமா என்று தகுந்த மருத்துவரை ஆலோசித்து அதன் பின்னர் பயன்படுத்த வேண்டும் என அவர் குறிப்பிடுகிறார்.
சீந்தில் இலை தேநீர் தயாரிக்கும் முறையை மருத்துவர் மைதிலி விளக்கியுள்ளார். அந்த வகையில், சிறியதாக இருக்கும் சீந்தில் இலைகள் 4 அல்லது 5 எடுத்து நன்றாக கழுவிக் கொள்ள வேண்டும். இதனை இரண்டு கிளாஸ் தண்ணீரில் கொதிக்க வைக்க வேண்டும்.
இந்த தண்ணீர் கொதிக்கும் போது கால் டீஸ்பூன் சீரகம் மற்றும் மஞ்சள் தூள் சேர்க்க வேண்டும். இரண்டு கிளாஸ் தண்ணீர் 60 மில்லி லிட்டர் அளவிற்கு வரும் வரை கொதிக்க வைக்க வேண்டும். அதன் பின்னர், அடுப்பை ஆஃப் செய்து விட்டு இதனை வடிகட்டி விடலாம்.
இந்த தேநீர் வெதுவெதுப்பான சூட்டில் இருக்கும் போது குடிக்க வேண்டும் என்று மருத்துவர் மைதிலி அறிவுறுத்துகிறார். கூடுமானவரை இதில் இனிப்பு சேர்க்காமல் குடிக்க வேண்டும் என்று அவர் கூறுகிறார். இதனை தொடர்ச்சியாக 90 நாட்களுக்கு காலை உணவு எடுத்துக் கொள்வதற்கு 30 நிமிடங்களுக்கு முன்பாக குடிக்க வேண்டும்.
நன்றி - Dr.Mythili - Ayurveda Doctor & Dietitian Youtube Channel
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.