91 கிலோ இருந்த சீரியல் நடிகை மீரா... 71 கிலோ குறைந்தது எப்படி? சீக்ரெட் ஜூஸ் இதுதானாம்!

கலாட்டா பிங்க் நடத்திய நேர்காணலில் பேசிய நடிகை மீரா கிருஷ்ணா, 3 மாதங்களில் 91 கிலோவிலிருந்து 71 கிலோவாக, அதாவது 20 கிலோ எடையைக் குறைத்தது எப்படி? என்று சீக்ரெட் மற்றும் உணவு முறைகள் குறித்து வெளிப்படையாகப் பேசி உள்ளார்.

கலாட்டா பிங்க் நடத்திய நேர்காணலில் பேசிய நடிகை மீரா கிருஷ்ணா, 3 மாதங்களில் 91 கிலோவிலிருந்து 71 கிலோவாக, அதாவது 20 கிலோ எடையைக் குறைத்தது எப்படி? என்று சீக்ரெட் மற்றும் உணவு முறைகள் குறித்து வெளிப்படையாகப் பேசி உள்ளார்.

author-image
WebDesk
New Update
Meera Krishna (1)

91 கிலோ இருந்த சீரியல் நடிகை மீரா... 71 கிலோ குறைந்தது எப்படி? சீக்ரெட் ஜூஸ் இதுதானாம்!

கலாட்டா பிங்க் நடத்திய நேர்காணலில் பேசிய நடிகை மீரா கிருஷ்ணா 3 மாதங்களில் 91 கிலோவிலிருந்து 71 கிலோவாக, அதாவது 20 கிலோ எடையைக் குறைத்தது எப்படி? என்று சீக்ரெட் மற்றும் உணவு முறைகள் குறித்து வெளிப்படையாகப் பேசி உள்ளார். 

எடை அதிகரிப்புக்கான காரணங்கள்:

Advertisment

ஒரு விபத்து காரணமாக உடல் செயல்பாடுகள் குறைந்ததே தனது எடை அதிகரிப்புக்கு முக்கியக் காரணம் என்று மீரா கிருஷ்ணா தெரிவித்து உள்ளார். இதனால் அசைவுகளிலும், உடற்பயிற்சியிலும் சிரமங்கள் ஏற்பட்டன. படப்பிடிப்பு டேட்ஸ் காரணமாக இரவு நேரங்களில் தாமதமாக உணவு உட்கொண்டதும், தனக்கு Pre-diabetic பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டதும் எடை குறைப்புக்குத் தன்னைத் தூண்டியதாக கூறியுள்ளார்.

மீரா கிருஷ்ணாவின் டயட் பிளான் & உணவு தேர்வு

காலையில் தனது நாளை நெய்யுடன் கூடிய பிளாக் காபியுடன் தொடங்குகிறார். நெய்யை விரும்புவதாகவும், சர்க்கரை சேர்க்காமல் அருந்துவதாகவும் குறிப்பிட்டுள்ளார். சிறந்த பலன்களுக்காக பால், சர்க்கரை, வெள்ளை அரிசி, கோதுமை மற்றும் ரவை ஆகியவற்றைத் தவிர்த்துள்ளார். ஆரம்பத்தில் மிளகாய் மற்றும் வாழைப்பழங்களைத் தவிர்ப்பது மிகவும் கடினமாக இருந்ததாகவும் தெரிவித்துள்ளார். மீன், கிரீன் டீ, அவகேடோ மற்றும் ஆம்லெட்டுகள் (முட்டையின் மஞ்சள் கருவைத் தவிர்த்து) உணவில் சேர்க்கப்பட்டதாக கூறினார். மிளகு, உப்பு, மஞ்சள் மற்றும் கரம் மசாலா சேர்த்து சமைப்பதாகக் கூறியுள்ளார். 

தினசரி உணவுப் பழக்கம்:

காலை 10 மணி நெய்யுடன் கூடிய பிளாக் காபி. பகல் 12 மணி முட்டை வெள்ளைக்கரு ஆம்லெட் அல்லது தேங்காய் சட்னியுடன் ராகி. மதிய உணவு (பகல் 2 அல்லது 3 மணி) அதிக கறிகளுடன் குறைந்த அளவு சாதம் அல்லது ஒரு சப்பாத்தியுடன் நிறைய கறிகள். இரவு உணவு (மாலை 6:30 மணிக்குள்) வேகவைத்த தந்தூரி சிக்கன், பனீர், வெங்காயம் மற்றும் தக்காளி சேர்த்த மக்கானா அல்லது பழங்கள். இரவு உணவுக்குப் பின்: கிரீன் டீ அல்லது வெந்நீர் அருந்தி 10 நிமிடங்கள் நடைபயிற்சி.

சீக்ரெட் ஜூஸ்:

Advertisment
Advertisements

பசியைக் கட்டுப்படுத்த, வயிறு நிரம்பும் வரை சாப்பிடுவதாகக் கூறியுள்ளார். உப்பு சேர்த்த எலுமிச்சை சாறு, கேரட், வெள்ளரி மற்றும் முட்டை வெள்ளைக்கரு ஆகியவற்றை பசியைக் கட்டுப்படுத்த உட்கொள்கிறார். தினமும் 4 லிட்டர் தண்ணீர் அருந்துகிறார். இதில், 750 மில்லி கிரீன் டீ (லெமன் கிராஸ் மற்றும் இஞ்சி சுவையுடன்), 2-3 கப் பிளாக் காபி மற்றும் 1 லிட்டர் உப்பு சேர்த்த எலுமிச்சை சாறு அடங்கும். இரவில் பசித்தால், காஷ்மீரி தேநீரான 'கஹ்வா' (Kahwa tea) அருந்துவதாகவும், இதில் உலர் பழங்கள், ரோஜா இதழ்கள் மற்றும் குங்குமப்பூ சேர்க்கப்பட்டிருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.

Food

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: