சுவையான சேமியா நூடுல்ஸ் ரெசிபி செய்வது குறித்து இங்கு பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
சேமியா – 1 கப்
கேரட் – 1
பீன்ஸ் – 6
குடமிளகாய் – 1 சிறியதாக
முட்டைகோஸ் – 50 கிராம்
பெரிய வெங்காயம் – 1
பச்சை மிளகாய் – 2
இஞ்சி – 1 துண்டு
பூண்டு – 6 பல்
வெங்காயத் தாள் – சிறிதளவு
சோயா சாஸ் – அரை டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
மிளகுதூள் – 1டீஸ்பூன்
செய்முறை
6 கப் தண்ணீரை கொதிக்கவைத்து சேமியாவை வேக வைத்து எடுத்துக் கொள்ளுங்கள். காய்கறிகளை மெல்லியதாக நீளவாக்கில் நறுக்குங்கள் (பூண்டு, இஞ்சி, மிளகாய் உள்பட). எண்ணெய் சூடானதும் வெங்காயத் தாள் நீங்கலாக மற்றவற்றை ஒன்றாக சேருங்கள். அத்துடன் உப்பு, சோயா சாஸ் சேர்த்து 5 நிமிடம் வதக்கி சேமியாவை சேருங்கள். அத்துடன், மிளகுதூள், வெங்காயத் தாள், உப்பு சேர்த்து நன்கு கிளறி இறக்குங்கள். அவ்வளவு தான் சுடச் சுடச்
சேமியா நூடுல்ஸ் ரெடி.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“