துவரம்பருப்பு – கால் கப்
மஞ்சள்தூள் – 1 சிட்டிகை
நறுக்கிய சேனைக்கிழங்கு – 1 கப்
சின்ன வெங்காயம் – 6
பச்சை மிளகாய் – 2
சாம்பார் பொடி – 1 டீஸ்பூன்
உப்பு – தேவைக்கேற்ப
தாளிக்க
கடுகு – அரை டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு – 1 டீஸ்பூன்
சீரகம் – கால் டீஸ்பூன்
காய்ந்தமிளகாய் – 1
எண்ணெய் – 3 டீஸ்பூன்
செய்முறை
முதலில் அடுப்பில் பாத்திரம் வைத்து துவரம் பருப்ப போட்டு அதனுடன் தண்ணீர், மஞ்சள்தூள் சேர்த்து அரைப் பதமாக வேகவைத்துக் கொள்ளவும். சேனைக்கிழங்கை தோல் நீக்கி நறுக்கி அலசி எடுத்துக் கொள்ளவும். வெங்காயத்தை பொடியாக நறுக்கி, பச்சை மிளகாயை நடுவில் கீறிக் எடுத்து வைத்துக் கொள்ளவும்.
கிழங்குத் துண்டுகள்,வெங்காயம், பச்சை மிளகாய், சாம்பார்பொடி ஆகியவற்றை பருப்புடன் சேர்த்து வேகவிட்டு, உப்பு சேர்த்து வதக்கவும். அடுத்தாக மற்றொரு கடாயில் எண்ணெய்விட்டு காய்ந்ததும், தாளிப்பவற்றை தேவையான பொருட்களை போட்டு தாளித்து வைக்கவும். இப்போது கூட்டு கொதித்ததும் இந்த தாளிப்பை போட்டு இறக்கினால் கமகம சேனைக் கிழங்கு கூட்டு ரெடி.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“