சத்தான சேப்பங்கிழங்கில் ப்ரை ரெசிபி செய்வது குறித்து இங்கு பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
சேப்பங்கிழங்கு – 500 கிராம்
கடலை மாவு – 2 டீஸ்பூன்
அரிசி மாவு – 2 டீஸ்பூன்
மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
மல்லித் தூள் – 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்
எண்ணெய் – தேவையான அளவு
உப்பு – சுவைக்கேற்ப
செய்முறை
முதலில் சேப்பங்கிழங்கை குக்கரில் போட்டு தண்ணீர் ஊற்றி மூடி அடுப்பில் வைத்து 1 விசில் விட்டு இறக்கவும். விசில் அடங்கியப் பின் குக்கரைத் திறந்து, அதன் தோலை நீக்கிவிட்டு, ஒவ்வொன்றையும் வட்ட வடிவில் நறுக்கி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்பு ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, அரிசி மாவு, மிளகாய் தூள், மல்லித் தூள், மஞ்சள் தூள், சுவைக்கேற்ப உப்பு சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். பிறகு அதில் வேக வைத்துள்ள சேப்பங்கிழங்கை சேர்த்து பிரட்டி, 20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
இப்போது அடுப்பில் கடாய் வைத்து 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும் ஊற வைத்துள்ள சேப்பங்கிழங்கை எண்ணெய்யில் போட்டு கிளற வேண்டும். ஸ்லோ ப்ளேமில் வைத்து சேப்பங்கிழங்கை நன்கு வறுத்து எடுக்கவும். மொறு மொறு என்று வரும் வரையில் வறுத்து எடுக்கவும். அவ்வளவு தான் சுவையான சேப்பங்கிழங்கு ரோஸ்ட் ரெடி.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“