பேரு கெட்டுப்போனலும் பரவால்ல, என்னை தேடி வர வாய்ப்பை யூஸ் பண்ணுவேன்; கூமாபட்டி ஜோடி சாந்தினி ஓபன் டாக்!

சின்னத்திரை நடிகை சாந்தினி தனது சினிமா வாழ்க்கை குறித்தும் அதற்கான தனது அர்ப்பணிப்பு குறித்தும் நேர்க்காணல் ஒன்றில் பகிர்ந்துள்ளார்.

சின்னத்திரை நடிகை சாந்தினி தனது சினிமா வாழ்க்கை குறித்தும் அதற்கான தனது அர்ப்பணிப்பு குறித்தும் நேர்க்காணல் ஒன்றில் பகிர்ந்துள்ளார்.

author-image
WebDesk
New Update
serial actress chandhini

‘கூமாபட்டி ஜோடி’ தங்கப்பாண்டி மற்றும் சாந்தினி பிரகாஷ், சமூக ஊடகங்களில் தங்களைப் பற்றிய கருத்துகள், விமர்சனங்கள் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து மனம் திறந்து பேசியுள்ளனர். ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் 'சிங்கிள் பசங்க' நிகழ்ச்சியில் தங்கப்பாண்டிக்கு ஜோடியாக சாந்தினி நடித்து வருகிறார். இந்நிலையில் சினி உலகம் யூடியூப் பக்கத்திற்கு அவர் அளித்த பேட்டியில் பல சுவாரசியமான தகவல்களை பகிர்ந்துள்ளார்.

Advertisment

சாந்தினி பிரகாஷ் பிரியமானவள், ஈரமான ரோஜாவே சீசன் 2, வனித்தை போல மற்றும் தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலிலும் நடித்து வருகிறார்.  தங்கள் தனிப்பட்ட மற்றும் தொழில் வாழ்க்கையில் எதிர்கொண்ட சவால்களையும், அவற்றில் இருந்து மீண்டு வந்ததையும் பற்றி மனம் திறந்து பேசினார். இந்நிலையில் சாந்தினிக்கு வரும் சில எதிர்மறையான கருத்துக்கள் பற்றி கேட்டபோது, தன்னுடைய பெயர் கெட்டுப்போய்விடுமோ என்று தான் கவலைப்படுவதில்லை என்றும், ஒரு வாய்ப்பு வரும்போது அதை 200% முழுமையாகப் பயன்படுத்துவேன் என்றும் சாந்தினி தெரிவித்தார்.

சினிமா பின்புலம் இல்லாதவர் என்பதால், தனியாகப் போராடி முன்னேறியதாக அவர் கூறினார். மேலும், பேம்ப்லெட்டுகள் போட்டு அதில் கிடைத்த வருமானத்தில் படித்ததாகவும், தன்னை யாரும் பார்க்க வேண்டிய அவசியமில்லை, தான் தன்னைத் தானே பார்த்துக்கொள்வேன் என்றும் உறுதியுடன் தெரிவித்தார். ஒருமுறை ஆடிஷனுக்குச் சென்றபோது, மோசமான அனுபவங்கள் மற்றும் மீடூ கருத்துக்களையும் சந்தித்ததாக சாந்தினி மனம் திறந்து பேசினார்.

இத்தகைய சவால்களைத் தனியாகவே எதிர்கொண்டு வந்ததாகவும், தனக்கு ஆதரவாகப் பேச ஒருவர் கூட இல்லை என்றும் வருத்தத்துடன் கூறினார். சாந்தினி, தான் ஒரு 'முரட்டு சிங்கிள்' என்றும், இதுவரை மூன்று பிரேக்கப்களைச் சந்தித்துள்ளதாகவும் தெரிவித்தார். பணம், தோற்றம் அல்லது உயரம் போன்ற வெளிப்புறத் தோற்றங்களைப் பார்த்து ஒருவரை விரும்புவதில்லை என்றும், தன்னை மதிக்கும், தன் சுயமரியாதைக்கும் குடும்பத்திற்கும் மரியாதை கொடுக்கும் ஒருவரைத்தான் தான் விரும்புவதாகவும் கூறினார்.

Advertisment
Advertisements

நடிகை சாந்தினி, மற்றவர்கள் என்னை பேசுவது பற்றி கவலை இல்லை, பேரு கெட்டுப்போனாலும் பரவாயில்லை எனக்கு வரும் வாய்ப்புகளை பயன்படுத்திக்கொள்வேன் என்று தெரிவித்தார். மேலும் சிங்கிள் பசங்க ஷோவில் தங்கப்பாண்டியோடு நடிக்க ஆரம்பத்தில் தயக்கமாக இருந்தாலும் இப்போது பிடித்துவிட்டது என்றும் கூறினார். மேலும் சூரியவம்சம் திரைப்படம் முதலிரவு காட்சியை நடித்த அனுபவங்களை பேசியும் இருந்தனர்.

Entertainment News Tamil Chandini

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: