எள்ளு சாப்பிடுவது உடல் நலத்திற்கு நல்லது. குறிப்பாக பெண்களுக்கு நல்லது. பெண்கள் தினமும் எள் சாப்பிட்டால் மார்பக புற்றுநோய் வராமல் தடுக்கலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். இங்கு எள்ளு தேங்காய் சட்னி செய்வது குறித்து இங்கு பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
எள்ளு – 1/4 கப்
துருவிய தேங்காய் – 1/2 கப்
பூண்டு – 4 பற்கள்
இஞ்சி – 1 துண்டு
வரமிளகாய் – 7
புளி – சிறிதளவு
கடுகு-1 /2 ஸ்பூன்
உளுந்தம் பருப்பு-1 ஸ்பூன்
கறிவேப்பிலை-1 கொத்து
பெருங்காயத்தூள் – 1 சிட்டிகை
நல்லெண்ணெய், உப்பு – தேவையான அளவு
செய்முறை
இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் ஆகியவற்றை நறுக்கி எடுத்துக் கொள்ளவும். இப்போது அடுப்பில் ஒரு கடாய் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி
காய்ந்ததும், எள்ளு விதைகளை சேர்த்து மிதமான தீயில் வைத்து வதக்கவும். எள் வதங்கி நன்றாக வாசனை வந்த பிறகு, அதில் பொடியாக நறுக்கி வைத்துள்ள இஞ்சி மற்றும் பூண்டு பற்களை சேர்த்து வதக்கவும். அடுத்து புளி சேர்த்து வதக்கி விட வேண்டும். இப்போது இதில் வரமிளகாய் மற்றும் துருவிய தேங்காயை சேர்த்து நன்கு வதக்கவும்.
அடுத்து வதக்கி எடுத்த பொருட்களை ஆற விட வேண்டும். பின்னர் இதை மிக்ஸி ஜாரில் சேர்த்து கொஞ்சம் உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும். அரைத்த சட்னியை ஒரு பாத்திரத்தில் மாற்றி எடுத்துக் கொள்ளவும்.
அடுத்ததாக அடுப்பில் மீண்டும் கடாய் வைத்து தாளிக்க சிறிது எண்ணெய் ஊற்றி அதில் கடுகு, உளுந்தம் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து
சட்னியில் சேர்க்கவும். அவ்வளவு தான் கம கம சுவையில் ருசியான எள்ளு தேங்காய் சட்னி தாயர். சூடான இட்லி உடன் வைத்து பரிமாறலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“