ஆயுர்வேத சிக்கிச்சை படி எள் சாப்பிட்டால் ஜீரணத்தை தூண்டும். மேலும் கொல்ஸ்ட்ராலை குறைத்து, ரத்த சர்க்கரை அளவை கட்டுபடுத்தும் என்று கூறப்படுகிறது.
எள் நமது இதயத்தின் ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது. மேலும் இதயத்தின் தசைகளையும் பாதுகாக்கிறது. மேலும் இதில் நார்சத்து, மெக்னிஷியம், சிங், கால்சியம், செலினியம் இருக்கிறது. மேலும் இதில் இருக்கும் வைட்டமின் பி1 ரத்த ஓட்டத்தை சீராக்குகிறது. இதய நோய் மற்றும் பக்கவாதம் வருவதற்கு உயர் ரத்த அழுத்தம் காரணமாக இருக்கிறது.
எள்ளில் இருக்கும் மெக்னிஷியம் உயர் ரத்த அழுத்தத்தை குறைக்க உதவுகிறது. மேலும் இதில் இருக்கும் வைட்டமின் இ சத்து நமது ரத்த குழாய்களில் கொழுப்பு படிவதை தடுக்கிறது. இதனால் ரத்த குழாய்கள் குறுகலாகாது.

இதில் இருக்கும் ஒருவைகை சத்து கொலஸ்ட்ராலை சீராக வைக்க உதவுகிறது. இன்சுலினை உடல் எடுத்துக் கொள்ள மறுக்கும்போது சர்க்கரை நோய் உருவாகிறது. இந்நிலையில் எள் ஆனது, உடல் இன்சுலினை ஏற்றுக்கொள்ள உதவி செய்கிறது.
இதில் இருக்கும் நார்சத்து, உடலில் சர்க்கரையை உருஞ்சிக்கொள்ளும் வேகத்தை குறைக்கிறது. மேலும் இது வயிற்றுப்போக்கு, மற்றும் மலச்சிக்கலை தடுக்க உதவுகிறது. இது குடலின் செயல்பாடுகளை அதிகரித்து, நல்ல பாக்ட்டீரியாவை அதிகரிக்கிறது.
இதில் இருக்கும் கால்சியம் சத்து எலும்புகளுக்கு வலு சேர்க்கிறது. மேலும் இதில் புரத சத்து இருப்பதால், சைவம் மட்டும் சாப்பிடுபவர்களுக்கு இதன் மூலம் புரோட்டீன் கிடைக்கும்.