கூல் டிரிங்ஸ் கூடவே கூடாது... காலையில் இந்த புரோட்டீன் உணவு; மூட்டு, இடுப்பு வலிக்கு குட்பை: டாக்டர் சொல்லுறத கேளுங்க!
"ஒரு நாளைக்கு 3 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். பழங்கள் அதிகம் சாப்பிடுதல் வேண்டும். நமது நாட்டு பழங்களை உணவுக்கு முன் ஒரு கையளவு கட் செய்து சாப்பிட்டு கொள்ளவும்." என்று டாக்டர் டெய்சி தங்கையா கூறுகிறார்.
இடுப்பு வலியில் இருந்து நிரந்தர தீர்வு கிடைக்க டாக்டர் டெய்சி தங்கையா சில முக்கிய குறிப்புகளை வழங்கி இருக்கிறார்.
நாம்மில் பலருக்கு மூட்டு, இடுப்பு வலி பெரும் பிரச்சனையாக இருந்து வருகிறது. இதற்கு பல வகையான மருந்துகளையும், பல்வேறு மருத்துவர்களையும் கலந்து ஆலோசித்து இருப்போம். ஆனாலும், அந்த வலி இன்னும் இருக்கலாம்.
Advertisment
அவ்வகையில், மூட்டு, இடுப்பு வலியில் இருந்து நிரந்தர தீர்வு கிடைக்க டாக்டர் டெய்சி தங்கையா சில முக்கிய குறிப்புகளை வழங்கி இருக்கிறார். இதுதொடர்பாக அவர் டெய்சி ஹாஸ்பிடல் யூடியூப் சேனலில் பேசியது பின்வருமாறு:-
எலும்பு தொடர்பான வலிகள், குறிப்பாக முட்டி வலி தொடர்பாக நிறைய பேர் கலந்து ஆலோசிக்க வருகிறார்கள். அவர்கள் ஆஸ்டியோபோரசிஸ், ருமட்டாய்டு ஆர்தரைடிஸ் எனக் கூறுகிறார்கள். வெறும் பெயின் கில்லர் மாத்திரைகள் மட்டும் தான் தருகிறார்கள். வலி குணமாகவில்லை என்று புலம்புகிறார்கள்.
இந்த மூன்று மாற்றங்களை உங்களது வாழ்க்கையில் செய்து பாருங்கள், மிகப் பெரிய மாற்றத்தை நீங்கள் உணர்வீர்கள். முதலாவது, காலை உணவாக அரிசியில் தயார் செய்யப்பட்ட உணவுகளை தவிர்க்க வேண்டும். குறிப்பாக இட்லி, தோசை, ஊத்தாப்பம், இடியாப்பம் போன்ற கார்போஹட்ரேட் அதிகம் காணப்படும் உணவுகளை தவிர்க்க வேண்டும். அவற்றுக்குப் பதிலாக புரோட்டீன் அதிகம் இருக்கும் உணவுகளை சாப்பிடும் பழக்கத்திற்கு மாற வேண்டும்.
Advertisment
Advertisements
காலையில் எதாவது ஒரு பயிறு வகையை உணவாக எடுத்துக் கொள்ளலாம். பட்டாணி, கிட் னி பீன்ஸ், அவரைக்கொட்டை, பயிச்பயிறு, ராஜ்மா, நரிப்பயிறு போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம். இவற்றுள் ஒன்றை இரவு முழுவதும் ஊற வைத்து காலையில் வேக வைத்து, சிறிதளவு உப்பு, வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளி சேர்த்து சாப்பிட்டு வரலாம். எல்லா நோயாளிகளுக்கும் இது அருமருந்து. கிட்னி பாதிப்பு, டயாலிசிஸ் சென்றவர்கள் மட்டும் தவிர்க்கலாம்.
இரண்டாவதாக, நிறைய ஜங்க் ஃபுட்ஸ் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். ஓட்டலில் ஆர்டர் செய்து சாப்பிடுவது, நிறைய பிராய்லர் சிக்கன் சாப்பிடுவது, விளம்பரத்தில் வரும் குளிர்பானம் சாப்பிடுவது, பாக்கெட்டில் அடைக்கப்பட்ட ஸ்நாக்ஸ் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். இந்த தவறான உணவுப் பழக்கத்தை கட்டாயம் தவிர்க்க வேண்டும்.
மூன்றாவதாக, ஒரு நாளைக்கு 3 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். பழங்கள் அதிகம் சாப்பிடுதல் வேண்டும். நமது நாட்டு பழங்களை உணவுக்கு முன் ஒரு கையளவு கட் செய்து சாப்பிட்டு கொள்ளவும். பழங்கள் சாப்பிட்டால் சளி பிடிக்கும் என்பவர்கள், சாட் மசாலா தூவி சாப்பிடலாம். கூடுதலாக, ஒருநாளைக்கு 10 நிமிடங்கள் வெயில் உடம்பில் படும்படி நடைபயணம் செய்ய வேண்டும். தொடர்ந்து உட்கார்ந்து கொண்டு வேலையும் மக்கள் குனிந்து நிமிர்ந்து பயிற்சி செய்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.