தாம்பத்திய வாழ்க்கைக்கு வயாகரா மாதிரி இயற்கையாக ஏதாவது இருக்கிறதா என்று பலரும் தேடிக் கொண்டிருக்கும் சூழலில், மருத்துவர் யோக வித்யா, தர்பூசணி, இஞ்சி, லெமன் தோல் ஜூஸ் என ஒரு சூப்பரான ஜூஸ் வயாகராவைவிட பெஸ் என்று பரிந்துரை செய்துள்ளார்.
குறிப்பாக ஆண்கள் தாம்பத்திய வாழ்க்கையில் வெற்றிகரமாக செயல்பட வயாகரா மாதிரி இயற்கை முறையில் ஏதாவது இருக்கிறதா என்று கேட்கிறார்கள். தென் ஆப்பிரிக்காவில், இயற்கையான முறையில் தர்பூசணி, இஞ்சி, லெமன் பயன்படுத்தி தென் ஆப்பிரிக்கா வயாகரா என்று தயாரிக்கிறார்கள்.
இது குறித்து மருத்துவர் யோக வித்யா யூடியூப் சேனலில் கூறுகையில், “தர்பூசணியை தோலோடு போட வேண்டும், இஞ்சியை தோல் சீவி போட வேண்டும். எலுமிச்சம் பழத்தை விதை எடுத்துவிட்டு தோலுடன் போட வேண்டும். அதை மிக்ஸியில் போட்டு நன்றாக அரைத்து வடிகட்டி தாம்பத்ய உறவில் ஈடுபடுவதற்கு முன்பு குடித்தால், அதில் நைட்ரஸ் ஆக்ஸைடு இருப்பதால், உறுப்புகளுக்கு நன்றாக ரத்தம் ஓட்டம் போய் நல்ல விரைப்புத் தன்மை இருக்கும். நீண்ட நேரம் உறவில் ஈடுபடலாம்.” என்று கூறுகிறார்.
அதே போல, நம்ம நாட்டில், வெண் பூசணியை காமப் பெருக்கையாக சித்த மருத்துவத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. அதனால், வெண்பூசணி ஜூஸை காலையில் லெமன் இஞ்சி போட்டு குடிக்கலாம். உறவில் ஈடுபடுவதற்கு முன்பு, தர்பூசணி, இஞ்சி, லெமன் போட்டு குடிக்கலாம்.
அதே போல, காமத்தைத் தூண்டக்கூடிய ஜாதிக்காய், கசகசாவை அறைத்து பாலில் கலந்து குடிக்கலாம். உறவில் ஈடுபடும் நேரம் அதிகரிக்கும். விந்து கெட்டித் தன்மை அடையும். இதனால், விந்து வெளியேறும் நேரம் தாமதமாகும் என்பதால் உறவு நேரம் நீடிக்கும்.
அதே போல, ஊறவைத்த வெந்தயத் தண்ணீரை, வெந்தயத்துடன் சேர்த்து சாப்பிடும்போது, சூடு தணிந்து நரம்புகள் வலுவடைந்து விரைப்புத் தன்மையை அதிகரிக்கும்” என்று மருத்துவர் யோக வித்யா கூறியுள்ளார்.