பாரம்பரிய உணவுப் பொருட்களில் உள்ள நன்மைகளைப் பற்றியும் அவற்றில் உள்ள சத்துக்கள், வைட்டமின்கள் மற்றும் மருத்துவ குணங்களைப் பற்றி தொடர்ந்து பேசிப் பேசி விழிப்புணர்வை ஏற்படுத்தியவர் மருத்துவர் சிவராமன்.
மருத்துவர் சிவராமன், நமது பாரம்பரிய உணவுப் பொருட்களில் உள்ள நல்ல விஷயங்களை அறிவியல் மொழியில் பேசி மக்கள் மத்தியில் கொண்டு போய் சேர்த்தவர்.
நம்முடைய வாழ்க்கை முறை, உணவுமுறை மாற்றங்களே பல நோய்களுக்கு காரணமாகி இருக்கிறது. நம்முடைய சூழலுக்கும் உடலுக்கும் ஒத்துக்கொள்ளாட பல புதிய உணவுகளை சாப்பிட தொடங்கியிருக்கிறோம்.
குறிப்பாக குழந்தைகள், இளைஞர்கள் இடையே பிரபலமான ஐஸ்கிரீம் பிடித்தமான ஒன்றாக இருக்கிறது. ஆனால், இன்றைக்கு நாம் சாப்பிடக்கூடிய பொருள் ஐஸ் கிரீம் பழைய ஐஸ் கிரீமே கிடையாது என்று மருத்துவர் சிவராமன் ஒரு நிகழ்ச்சியில் அதிர்ச்சியான தகவலைக் கூறியுள்ளார்.
மேலும், “நாங்கள் சின்ன பிள்ளைகளாக இருக்கும்போது, பால் ஐஸ், கப் ஐஸ், சேமியா போட்டு ஒரு ஐஸ் என ஒரு மூன்று நான்கு ஐஸ் வகைகள்தான் இருந்தது. ஆனால், இன்றைக்கு ஐஸ் கிரீம் வகைகள் இருக்கிறது. ஆனால், ஒரு விஷயம் தெரியுமா? அது எல்லாம் ஐஸ் கிரீமே கிடையாது. அதற்குப் பெயர் ‘ஃப்ரோசன் டசர்ட்’. ஐஸ் கிரீம் வேறு, ‘ஃப்ரோசன் டசர்ட்’ வேறு. அறிவியல் ரீதியாக உணவியல் ரீதியாக இரண்டும் வேறு வேறு.” என்று மருத்துவர் சிவராமன் கூறியுள்ளார்.
மேலும், அந்த வீடியோவில் தோடர்ந்து பேசிய மருத்துவர் சிவராமன், “அமுல் நிறுவனம் ஒரு வழக்கு போட்டது. யாரும் ஐஸ் கிரீம் பயன்படுத்தக் கூடாது, நாங்கள் மட்டும்தான் பாலில் இருந்து செய்கிறோம். மற்றவர்கள் எல்லாம் பாலில் இருந்து செய்யவில்லை என்று வழக்கு போட்டு கிட்டத்தட்ட 7 ஆண்டுகள் வழ்க்கு நடந்து சமீபத்தில் தீர்ப்பு வந்தது. நீங்கள் நன்றாக உற்றுப் பாருங்கள், நீங்கள் சாப்பிடக்கூடிய பல பன்னாட்டு ஐஸ் கிரீம்களில் ஐஸ்கிரீம் என்ற வார்த்தையே இருக்காது. ‘ஃப்ரோசன் டசர்ட்’ என்றுதான் இருக்கும். அவர்கள் வழக்கு போட்ட பிறகு, ‘ஃப்ரோசன் டசர்ட்’ என்று குறிப்பிட்டார்கள்.” மருத்துவர் சிவராமன் ஒரு தகவலைக் கூறியுள்ளார்.
ஐஸ் கிரீம் மற்றும் ‘ஃப்ரோசன் டசர்ட்’ இடையேயான வேறுபாடு குறித்து மருத்துவர் சிவராமன் கூறுகையில், “ஐஸ்கிரீமை விட பல மடங்கு ஆபத்து இந்த ‘ஃப்ரோசன் டசர்ட்’டில் இருக்கிறது. அது கெட்டுப்போகாமல் இருப்பதற்கு, அது மேலே ஒரு படலம் படலமாக இருப்பதற்கு, அது சிறப்பான மனம் வருவதற்கு, அதிலிருந்து காப்பீடு பெற்ற சுவையைக் கொடுப்பதற்கு, பல்வேறு ரசாயனக் கூறுகள் ஒவ்வொரு ‘ஃப்ரோசன் டசர்ட்’க்குள்ளும் ஒளிந்திருக்கிறது.” என்று சிவராமன் விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“