நம்மில் பலர் சப்பாத்தி அல்லது ரொட்டியை நெய் அல்லது வெண்ணெய் தடவி சாப்பிட விரும்புகிறோம். இது ரொட்டியை மென்மையாக்குவது மட்டுமல்லாமல், உலர்ந்த மற்றும் செதில்களாக மாறுவதைத் தடுக்கிறது.
ஆனால் ரொட்டியில் நெய் சேர்க்க நிபுணர்கள் பரிந்துரைக்கிறார்களா? ஆம் எனில், எவ்வளவு? இந்தக் கேள்விகளுக்குப் பதிலளிக்கிறார் அஞ்சல் சோகானி. இவர் ஒரு சான்றளிக்கப்பட்ட ஊட்டச்சத்து நிபுணர்.
இந்திய குடும்பங்கள், குறிப்பாக வடக்கில், சப்பாத்திக்கு நெய் தடவுவது கிட்டத்தட்ட ஒரு சடங்கு. ஆனால் மிதமான அளவில், நெய் உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் அதிசயங்களைச் செய்யும்.
பெரும்பாலும், உடல் எடையைக் குறைக்கும் முயற்சியில் ஈடுபடும்போது, நம் உணவில் இருந்து நெய்யை முற்றிலுமாக அகற்ற நினைக்கிறோம். ஆனால் அப்படி இருக்கக்கூடாது என்கிறார் இந்த ஊட்டச்சத்து நிபுணர்.
எடை இழப்பு அடைய நெய் ஏன் உதவுகிறது
சப்பாத்தியின் கிளைசெமிக் குறியீட்டைக் குறைக்க நெய் உதவுகிறது. கிளைசெமிக் இண்டெக்ஸ் (ஜிஐ) என்பது கார்போஹைட்ரேட் கொண்ட உணவுகளுக்கான மதிப்பீட்டு அமைப்பாகும். ஒவ்வொரு உணவும் உட்கொள்ளும் போது உங்கள் இரத்த சர்க்கரை (குளுக்கோஸ்) அளவை எவ்வளவு விரைவாக பாதிக்கிறது என்பதை இது காட்டுகிறது.
நெய் உங்களை நிறைவாக உணர வைக்கிறது. நாளின் பிற்பகுதியில் நீங்கள் மற்ற கொழுப்பை உண்டாக்கும் உணவுகளை அதிகமாக சாப்பிட வேண்டியதில்லை.
நெய்யில் கொழுப்பில் கரையக்கூடிய வைட்டமின்கள் உள்ளன, இது எடை குறைக்க உதவுகிறது. ஹார்மோன்களை சமநிலைப்படுத்துவதிலும், ஆரோக்கியமான கொலஸ்ட்ராலை பராமரிப்பதிலும் நெய் முக்கிய பங்கு வகிக்கிறது.
நெய் எவ்வளவு போதும்?
சப்பாத்தியில் அளவுக்கு அதிகமாக நெய் இருக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள். ஒரு ரொட்டிக்கு ஒரு சிறிய டீஸ்பூன் நன்றாக இருக்கும். அளவுக்கு அதிகமாகச் செய்தால் அது உடலுக்குக் கேடுதான்.
இந்த நிலையில், பிரபல ஊட்டச்சத்து நிபுணர் ருஜுதா திவேகரும் இன்ஸ்டாகிராமில் நெய் குறித்து பகிர்ந்துள்ளார்.
அதில், “நெய்யில் சமைத்து பருப்பு, சாதம், பக்ரி, பாத்தி மற்றும் சப்பாத்திகளில் சேர்ப்பது அவசியம். இது அத்தியாவசிய கொழுப்பு அமிலங்களைக் கொண்டுள்ளது மற்றும் வைட்டமின் டி, ஏ மற்றும் ஈ ஆகியவற்றை எளிதாக உறிஞ்சுகிறது. மேலும், இது ஒரு சுவையை மேம்படுத்துகிறது” எனத் தெரிவித்துள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil