சுரைக்காய் பெரும்பாலும் பல வகையான சமையல்களில் பயன்படுத்தப்படுகிறது. இந்த காய் மேலே தடிமனாகவும் உள்ளே சதைப்பகுதி மிருதுவாகவும் இருக்கும். இதை சமைக்கும் போது அதன் மேற்பகுதி உடலுக்கு நல்லதா என்று யோசித்து இருக்கிறீர்களா? இதை பற்றி தெரிந்து கொள்ள Indianexpress.com நிபுணர்களை அணுகினோம்.
பெங்களூருவின் ஆஸ்டர் சி.எம்.ஐ மருத்துவமனையின் மருத்துவ ஊட்டச்சத்து மற்றும் உணவியல் சேவைகளின் தலைவர் எட்வினா ராஜ் கூறுகையில், சுரைக்காய் ஊட்டச்சத்துக்கள் மற்றும் நார்ச்சத்து நிறைந்திருந்தாலும், பூச்சிக்கொல்லி எச்சங்கள் மற்றும் தோலின் அமைப்பு பற்றிய பலவிதமான அச்சங்கள் இருந்து வருகிறது.
"தோலில் நார்ச்சத்து ஏராளமாக உள்ளது, இது செரிமானத்தை காக்கவும் எடை கட்டுப்பாட்டுக்கு உதவுகிறது. இது ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் அத்தியாவசிய வைட்டமின்களையும் வழங்குகிறது, "என்று அவர் கூறினார்.
இதை ஒப்புக்கொண்ட மருத்துவ ஊட்டச்சத்து நிபுணரும், சென்னையின் ஸ்ரீ ராமச்சந்திரா உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் விரிவுரையாளருமான சி.வி.ஐஸ்வர்யா, சுரைக்காய் தோல் புதியதாகவும், ஒழுங்காக சமைக்கப்பட்டதாகவும், மிதமாகவும் இருந்தால், சாப்பிட பாதுகாப்பானது என்று கூறினார்.
"தோல் நார்ச்சத்துக்கான நல்ல மூலமாகும், இது செரிமானம் மற்றும் குடல் ஆரோக்கியத்தை ஆதரிக்கிறது. இதில் பாலிஃபினால்கள் மற்றும் ஃபிளாவனாய்டுகள் உள்ளன, அவை ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தையும் வீக்கத்தையும் குறைக்க உதவுகின்றன.
Should you eat lauki with or without the peel?
சுரைக்காயின் தோலில் பொட்டாசியம் மற்றும் வைட்டமின் சி நிறைந்திருப்பதாக அறிவியல் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதன் அதிக நார்ச்சத்து உள்ளடக்கம் குடல் இயக்கங்களை மேம்படுத்தலாம் மற்றும் மலச்சிக்கலைத் தடுக்க உதவும், "என்று அவர் கூறினார்.
மனதில் கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கைகள்
ஐஸ்வர்யா மேலும் கூறுகையில், "அரிதான சந்தர்ப்பங்களில், சில நபர்கள் சுரைக்காய்க்கு ஒவ்வாமை எதிர்விளைவுகளை சந்திக்க நேரிடும், இது அரிப்பு, வீக்கம் அல்லது சுவாசக் கஷ்டங்கள் போன்ற அறிகுறிகளுக்கு வழிவகுக்கும். சுரைக்காய் சாற்றை அதிகமாக உட்கொள்வது இரத்த சோடியம் அளவை நீர்த்துப்போகச் செய்து, பலவீனம், குழப்பம் அல்லது மிகவும் கடுமையான உடல்நல சிக்கல்களை ஏற்படுத்தும்.
எனவே இதனை சமைக்கும் முன்பு காய்கறியை நீரில் நன்கு கழுவி தோலை துடைத்து பயன்படுத்த வேண்டும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.