scorecardresearch

பி.பி அதிகமா இருக்கா? காலையில் லெமன், உப்பு, தண்ணீர் ட்ரை பண்ணுங்க!

குறிப்பாக நீங்கள் காலை எழுந்தவுடன் தண்ணீரில், உப்பு மற்றும் எலுமிச்சை சாறை சேர்த்து குடிக்க வேண்டும். இதனால் ஒரு நாள் முழுக்க நம்மை வரட்சியாகாமல் வைத்திருக்க உதவும்.

பி.பி அதிகமா இருக்கா? காலையில் லெமன், உப்பு, தண்ணீர் ட்ரை பண்ணுங்க!

நமது உடலை நாள் தோறும் வரட்சியாகமால் தவிர்க்க ஒரு புது செயல்முறை தற்போது வைரலாகி வருகிறது.

குறிப்பாக நீங்கள் காலை எழுந்தவுடன் தண்ணீரில், உப்பு மற்றும் எலுமிச்சை சாறை சேர்த்து குடிக்க வேண்டும். இதனால் ஒரு நாள் முழுக்க நம்மை வரட்சியாகாமல் வைத்திருக்க உதவும்.

இது உடலை சுத்திகரிக்கும். ஆரோக்கியமான நரம்புகளை உருவாக்கும். திடீரென்று அதிகரிக்கும் இதய துடிப்பை சீராக்கும்.

எலுமிச்சையில் ஆண்டி ஆக்ஸிடண்ட், வைட்டமின்ஸ், மினரல்ஸ் இருக்கிறது. இந்நிலையில் இந்த கலவை நமது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

இந்த எலுமிச்சை நீர் கலவை சீரணிக்க உதவும் என்சைம்களை தூண்டுகிறது. இவை நமது வயிற்றில் இருக்கும் ஹைட்ரோ குளோரிக் அமிலத்தை தூண்டி உணவை உடைத்து  சீரணமாக உதவுகிறது.

இதில் இருக்கும் உப்பு உணவை உடல் எடுத்துக்கொள்ளவும்,  உடலில் உள்ள சத்துகளை உள்வாங்கிக்கொள்ளவும்  உதவுதன் மூலம் மலச்சிக்கலை தவிர்க்கிறது.

சிறுநீரகக் கல் மற்றும் பலவகையான ஆர்தரைடிஸ் உருவாக யூரிக் ஆசிட் ஒருவகை காரணமாக இருக்கலாம்.  நாம் அடிக்கடி தண்ணீர் குடித்து வந்தாலே சிறுநீரகக் கற்கள் உருவாகாது.  இந்த எலிமிச்சை தண்ணீர், உடலை வரட்சியடையாமல் பாதுகாப்பதுடன், சிறுநீரக கல் உருவாகாமல் தடுக்கிறது. சில நேரம் சிறுநீரக கற்களை உடைத்து கரைக்கவும் உதவுகிறது.

எலுமிச்சை மற்றும் உப்பு  ஆகியவை இதய ஆரோக்கியத்திற்கு உதவுகிறது. இதில் இருக்கும் வைட்டமின் சி, குளூட்டோதயான் குடலை சுத்திகரிக்க உதவுகிறது.

நமது உடலுக்கு  பி.எச் அளவு இருக்கிறது. இந்த பி.எச் அளவுதான் நமது ஒட்டுமொத்த உடல் இயக்கத்திற்கும் காரணமாக இருக்கிறது. எலுமிச்சை சாறு மற்றும் உப்பு இந்த அளவை சீராக வைத்துகொள்ள உதவுகிறது.

Stay updated with the latest news headlines and all the latest Food news download Indian Express Tamil App.

Web Title: Should you have a concoction of water lemon and salt as soon as you

Best of Express