நம் அன்றாட உணவில் சேர்த்து வரும் கறிவேப்பிலை அவ்வளவு ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளது. ஆனால் நாம் அதை சாப்பிடாமல் தூக்கி எறிவோம். கறிவேப்பிலை செய்யும் ஆரோக்கிய மாயங்களை தெரிந்துக் கொண்டால் இனி தூக்கி எறிய மாட்டீர்கள்.
Advertisment
சித்த மருத்துவர் சிவராமன் தனியார் யூடியூப் சேனலில் கறிவேப்பிலை ஆரோக்கிய நன்மைகளைப் பட்டியலிட்டுள்ளார்.
நம்மில் பெரும்பாலானோர் செய்யும் முதல் வேலை சாப்பாட்டில் இருக்கும் கறிவேப்பிலையை ஒதுக்கி தள்ளுவது தான். கறிவேப்பிலை வாசத்திற்காக மட்டுமே சேர்க்கப்படுகிறது என சிலர் நினைக்கின்றனர். ஆனால் கறிவேப்பிலை பல்வேறு நோய்கள் வருவதை தடுக்கிறது. சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்த உதவுகிறது. கறிவேப்பிலையில் உள்ள கார்பசோல் சர்க்கரையை கட்டுப்படுத்த உதவுகிறது.
கறிவேப்பிலை கெட்ட கொழுப்பைக் குறைத்து, நல்ல கொழுப்பை அதிகரிப்பதாக சமீபத்திய ஆய்வுகள் கூறுகின்றன. சர்க்கரை மாத்திரை சாப்பிடுவோர் கறிவேப்பிலையை உணவில் சேர்த்துக் கொண்டால், சர்க்கரை குறைவதாக கூறப்படுகிறது.
கறிவேப்பிலையில் முடி வளர்ச்சிக்கு தேவையான சத்துக்கள் உள்ளன. இரும்புச்சத்து, கனிமச்சத்துக்கள் கறிவேப்பிலையில் நிறைந்துள்ளன.
பரபரப்பு, மன அழுத்தம் உள்ளவர்களுக்கு குடல் சார்ந்த பிரச்சனைகள் இருக்கும். ஐ.பி.எஸ் எனப்படும் இரிட்டபிள் பவல் சிண்ட்ரோம் உடையவர்களுக்கு கறிவேப்பிலை சிறந்த தீர்வை அளிக்கிறது. கறிவேப்பிலை பொடியை உணவில் சேர்த்து சாப்பிட்டால், இந்தப் பிரச்சனை தீரும். மேலும் அமீபியாசிஸ் நோய்க்கும் கறிவேப்பிலை பயன்படுகிறது.
கறிவேப்பிலையை ப்ரெஷ்ஷாக பயன்படுத்தினால் நல்ல பலன் கிடைக்கும். அதேநேரம் பொடியாக செய்து நீண்ட காலம் சாப்பிட விரும்புபவர்கள், கறிவேப்பிலை பறித்து வெயிலில் காய வைக்காமல், நிழலில் உலர்த்தினால், நல்ல ஆரோக்கிய நன்மைகள் அப்படியே கிடைக்கும்.
சில குழந்தைகள் குடித்த உடனேயே தாய்ப்பாலை கக்கி விடுவார்கள். இதற்கு கறிவேப்பிலை காம்பை தண்ணீரில் நசுக்கி, தாய்ப்பாலுடன் சேர்த்து 2 -3 சொட்டு கொடுத்தால், குழந்தைக்கு செரிமானம் நன்றாக இருக்கும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“