சுகரை சட்டுன்னு குறைக்கும் இந்த ஜூஸ்... காலையில் இந்த நேரம் குடிச்சா ரொம்ப நல்லது: டாக்டர் ஷர்மிகா
சுரைக்காயில் சுமார் 96 சதவீதம் நீர்ச்சத்து நிரம்பியுள்ளது. இது, நமது உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ளவும், போதுமான நீர்ச்சத்து வழங்கி புத்துணர்ச்சியாக வைத்துக் கொள்ளவும் உதவுகிறது.
சுரைக்காயில் சுமார் 96 சதவீதம் நீர்ச்சத்து நிரம்பியுள்ளது. இது, நமது உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ளவும், போதுமான நீர்ச்சத்து வழங்கி புத்துணர்ச்சியாக வைத்துக் கொள்ளவும் உதவுகிறது.
சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்கவும், உடல் எடையை குறைக்க விரும்புபவர்களும், ரத்த அழுத்தத்தை குறைக்க விரும்புபவர்களும் சுரைக்காயை தினசரி உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.
அதிக நீர்ச்சத்து கொண்ட காய்கறிகளில் சுரைக்காய் முக்கிய இடத்தைப் பிடிக்கிறது. இந்த கோடை காலத்தில் அதிகம் விளையக் கூடிய காய் வகையாகவும் இவை உள்ளது. தமிழகத்தில் பல வகையில் அதிகப்படியாக விளையும் இந்த காய் விளைந்து வருகிறது. இவை உடலுக்கு ஏராளமான மருத்துவ நன்மைகளை அள்ளிக் கொடுக்கிறது.
Advertisment
குறிப்பாக, சுரைக்காயில் சுமார் 96 சதவீதம் நீர்ச்சத்து நிரம்பியுள்ளது. இது, நமது உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ளவும், போதுமான நீர்ச்சத்து வழங்கி புத்துணர்ச்சியாக வைத்துக் கொள்ளவும் உதவுகிறது. இவற்றில் வைட்டமின் சத்துக்கள், நீர்ச்சத்து, நார்ச்சத்து போன்றவை நிரம்பி காணப்படுகிறது.
வயிறு, இதயம் ஆகியவற்றின் நலம் காக்கிறது. மேலும், பல்வேறு ஆரோக்கிய பலன்களை சுரைக்காய் அளிக்கிறது. சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்கவும், உடல் எடையை குறைக்க விரும்புபவர்களும், ரத்த அழுத்தத்தை குறைக்க விரும்புபவர்களும் இதை தினசரி உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.
இந்நிலையில், சுரைக்காயில் தயார் செய்யப்படும் ஜூஸ் குடித்து வந்தால் சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்கும் மருத்துவர் ஷர்மிகா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக யூ டியூப் வீடியோ ஒன்றில் அவர் பேசுகையில், "சர்க்கரை நோய்க்கு மிகவும் நன்மை பயக் கூடியது இந்த சுரைக்காய் ஜூஸ்.
Advertisment
Advertisements
இந்த ஜூஸ் போடும் போதும் கொஞ்சம் இஞ்சி தட்டிப் போட்டால் அதன் டேஸ்ட் தூக்கலாக இருக்கும். இந்த ஜூஸை நீங்கள் வாக்கிங் அதாவது நடைப் பயிற்சி சென்று விட்டு வரும் போது, காலை 6 முதல் 7 மணி நடைப்பயிற்சி மேற்கொண்டால் 7:30 மணிக்கு பருகலாம். நடைப்பயிற்சி மேற்கொள்ளும் முன் இந்த ஜூஸ் குடிக்க வேண்டாம். இந்த ஜூஸ் குடிக்க ஆரம்பித்த ஒரு மாதத்திற்குப் பிறகு உங்களது ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை சரி பார்த்துக் கொள்ளவும்" என்று அவர் கூறியுள்ளார்.
சுரைக்காய் தயார் செய்வது எப்படி?
ஒரு சுரைக்காய் எடுத்து அதன் தோலை நீக்கிவிட்டு பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பிறகு அதனை மிக்சியில் போட்டு, அதனுடன் ஒரு துண்டு இஞ்சி, 5-6 மிளகு, கொஞ்சம் உப்பு, மல்லித்தழை சேர்த்து அரைத்துக் கொள்ளவும். பிறகு அதனை வடிகட்டி பருகி வரலாம்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.