வெந்தயத்தை வறுத்து பொடி செய்து ஒரு பாட்டிலில் வைங்க... டெய்லி அரை ஸ்பூன்..! மருத்துவர் சிவராமன் அட்வைஸ்
"வெந்தயத்தை வறுத்து பொடி செய்து ஒரு பாட்டிலில் அடைத்து நாம் சாப்பிடும் இடத்தில் வைத்து விட வேண்டும். தினமும் அரை ஸ்பூன் அல்லது 10 கிராம் எடுக்க வேண்டும்." என்று மருத்துவர் சிவராமன் கூறுகிறார்.
"வெந்தயத்தில் கரையும் நாரும் இருக்கிறது, கரையா நாரும் இருக்கிறது. கரையும் நார் இதயத்தில் மாரடைப்பு வராமல் தடுக்கும். கரையா நார் மலத்தை தள்ளும். என்று மருத்துவர் சிவராமன் கூறுகிறார்.
நம்முடைய தினசரி உடல்நலப் பிரச்சினைகளை திறம்பட நிர்வகிக்க உதவும் மூலப்பொருட்களின் சக்தியாக நமது சமையலறை உள்ளது. அதனால்தான், நம் பெரியவர்கள் மட்டுமல்லாமல், ஆயுர்வேத பயிற்சியாளர்களும் நம் ஆரோக்கியத்திற்கு உதவும் மசாலா மற்றும் மூலிகைகளை தினசரி நமது சமையலில் பயன்படுத்த பரிந்துரைக்கின்றனர்.
Advertisment
அந்த வகையில் நமது அன்றாட சமையலில் பயன்படுத்தும் பொருட்களில் முக்கிய இடத்தைப் பிடித்திருக்கிறது வெந்தயம். இந்நிலையில், வெந்தயத்தை எப்படி சாப்பிட வேண்டும் என்று சித்த மருத்துவர் சிவராமன் சில அறிவுரைகளை வழங்கியுள்ளார்.
இது தொடர்பாக மருத்துவர் சிவராமன் யூடியூப் வீடியோ ஒன்றில் பேசுகையில், "வெந்தயத்தை வறுத்து பொடி செய்து ஒரு பாட்டிலில் அடைத்து நாம் சாப்பிடும் இடத்தில் வைத்து விட வேண்டும். தினமும் அரை ஸ்பூன் அல்லது 10 கிராம் எடுக்க வேண்டும். வெந்தயத்தில் கரையும் நாரும் இருக்கிறது, கரையா நாரும் இருக்கிறது.
கரையும் நார் இதயத்தில் மாரடைப்பு வராமல் தடுக்கும். கரையா நார் மலத்தை தள்ளும். குடலுக்குள் சென்று நீரை உறிஞ்சி வெளியேற்றும். பல சர்க்கரை நோயாளிகளுக்கு மலச் சிக்கல் மிகப் பெரிய பிரச்சனையாக இருக்கிறது. இதனை சரி செய்ய தினமும் வெந்தய பொடி எடுத்துக் கொள்ள வேண்டும்." என்று அவர் அதில் கூறுகிறார்.
Advertisment
Advertisements
வெந்தயம் பயன்கள்
வெந்தயத்தை வறுத்து, நீர் விட்டு காய்த்து தேன் சேர்த்து சாப்பிட வயிற்று கடுப்பு தீரும். திடீரென ஏற்படும் வயிற்று வலிக்கு வெந்தயத்தை நெய்யில் வறுத்து பொடியாக்கி மோரில் கலந்து குடிக்க வலி தீரும்.
வெயில் காலத்தில் உடல் உஷ்ணம் அதிகமாகும். எனவே உஷ்ண பிரச்சினை ஏற்படாமல் இருக்க வெந்தயத்தை இரவில் ஊறவைத்து மறுநாள் காலையில் அந்த தண்ணீரை வெந்தயத்துடன் சேர்த்து குடிக்க வயிறும், உடம்பும் குளிரும்.வெந்தயம் குளிர்ச்சியை உண்டாக்கும். சிறுநீரை பெருக்கும்.
துவர்ப்புத் தன்மை உடையது. வெந்தய விதையிலுள்ள ஆல்கலாய்டுகள் பசியைக் கூட்டும். நரம்புகளைப் பலப்படுத்தும். வெந்தையக்கீரை குளிர்ச்சியை உண்டாக்கும் தன்மை கொண்டது. கீரையை சப்பாத்தி மாவுடன் சேர்த்து கீரை சப்பாத்தியாக சாப்பிடலாம். தோசைக்கு சேர்க்கும் உளுந்துடன் சிறிதளவு வெந்தயம் சேர்க்க பலம் ஏற்படுவதோடு தோசை நிறமாக இருக்கும். வெந்தயத்தை மாவாக்கி, இனிப்பு சேர்த்து களி போல கிளறி சாப்பிட்டு வந்தால் நோய்கள் நீங்கும். உடல் பலம் பெறும் உடல் சூட்டையும் கட்டுப்படுத்தும்.
சித்த, ஆயுர்வேத வைத்திய முறைகளில் வெந்தயம் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. சீதபேதி, மூலநோய் இவைகளை குணப்படுத்த, முடி உதிர்தல், தோல் நோய், வாய்வுத் தொல்லையை போக்கவும் பயன்படுத்தப்படுகிறது.
20 கிராம் வெந்தயத்தை வறுத்து, இடித்து 50 கிராம் வெல்லம் சேர்த்து பிசைந்து ஒரு நாள் நான்கு முறை சாப்பிட சீதபேதி நிற்கும். சிறிதளவு வெந்தயத்தை மோரில் ஊறவைத்து அரைத்து, மோரில் கலக்கி குடிக்க குணமாகும். மோரில் வெந்தயத்தை ஊற வைத்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட வாய்வு, வயிற்று பொருமல் நீங்கும்.
100 கிராம் வெந்தயத்தை வறுத்து, பொடியாக்கி, 200 கிராம் சர்க்கரை சேர்த்து உண்ண பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் வயிற்று வலி, இடுப்பு வலி பிரச்சினைகள் நீங்கும். வெந்தயத்தை கஷாயமாக்கி குடித்தாலும் வலி தீரும்.
இன்றைக்கு பலருக்கும் முடி உதிர்வு பிரச்சினை பெரிய பிரச்சினையாக உள்ளது. வெந்தயத்தை ஊறவைத்து அரைத்து அதை தலைக்கு பேக் போல போட்டு நன்றாக தேய்த்து குளித்தால் முடி உதிர்வு பிரச்சினை கட்டுப்படும். வெந்தயத்தில் உள்ள எண்ணெய் பசை தலைமுடிக்கு வளர்ச்சியை, கருமை நிறத்தை தருகிறது.