சர்க்கரை நோயாளிகளின் செரிமான பிரச்னைக்கு பப்பாளி காய் ஒரு அற்புதமான தீர்வு என்று சித்த மருத்துவர் டாக்டர் உஷா நந்தினி கூறியுள்ளார். சர்க்கரை நோயாளிகள் பப்பாளிக் காயை பயன்படுத்தினால், செரிமானப் பிரச்னைக்கு குட்பை சொல்லலாம்.
புதுயுகம் டிவியில் என்றும் இனியவை நிகழ்ச்சியில் பேசியுள்ள டாக்டர் உஷா நந்தினி, சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்படக் கூடிய செரிமானப் பிரச்னை குறித்தும் சர்க்கரை நோயாளிகள் பப்பாளிக் காய் சாப்பிடுவதன் மூலம் செரிமானப் பிரச்னையை சரி செய்யும் என்றும் கூறியுள்ளார்.
உலகம் முழுவதும் அதிகம் பேர் சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் நோயால் பாதிகப்பட்டுள்ளனர். இதில் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களிண் எண்ணிக்கை மிக அதிகம். சர்க்கரை நோயாளிகளைப் பொறுத்தவரையில் உடலில், கணையம், கல்லீரல், மண்ணீரல், சிறுநீரகம் ஆகியவை 4 முக்கிய உறுப்புகள், இதில், 5-வது ஜீரண மண்டலம் என்கிற குடல் பகுதியும் ரொம்ப முக்கியம் என்கிறார் டாக்டர் உஷா நந்தினி.
சர்க்கரை நோயாளிகள் பலருக்கும் செரிமானப் பிரச்னை இருக்கிறது. சர்க்கரை நோயாளிகள் என்ன சாப்பிட்டாலும், அவை சரியாக செரிமானம் ஆகாமல் உடலில் இருந்து வெளியேறுகின்றன. இத்தகைய பிரச்னை இருப்பவர்களுக்கு பப்பாளிக் காய் ஒரு அற்புதமான உணவு என்கிறார் டாக்டர் உஷா நந்தினி.
பப்பாளிக் காய் ஜீரண மண்டல பிரச்னைகளை சரி செய்வதாகக் கூறும் டாக்டர் உஷா நந்தினி, பப்பாளி காயில் உள்ள கைமோ பேப்பைன், பேப்பைன் என்கிற 2 என்சைகள் செரிமானப் பிரச்னையை சரி செய்கிறது என்கிறார்.
மேலும், பப்பாளி காய் என்பது பப்பாளி பழம் ஆவதற்கு முன்பு இருக்ககூடிய ஒரு நிலை. இதை சர்க்கரை நோயாளிகள், பொரியல், கூட்டாக செய்து சாப்பிடலாம். பப்பாளிக் காய் சர்க்கரை நோயாளிகளின் செரிமானப் பிரச்னையை சரி செய்து அவர்களின் ஜீரண மண்டல பிரச்னையையும் சரி செய்கிறது. அதோடு, சர்க்கரையின் அளவையும் குறைத்து, உடலுக்கு தேவையான சத்துக்களையும் அளிப்பதாக டாக்டர் உஷா நந்தினி கூறுகிறார்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.