/indian-express-tamil/media/media_files/2025/07/18/ginger-thokku-2025-07-18-18-26-43.jpg)
சாதம் மற்றும் டிபன் வகைகளுடன் சேர்த்து சாப்பிடக்கூடிய அருமையான இஞ்சி தொக்கு எப்படி செய்வது என்று ஹோம்குக்கிங் தமிழ் யூடியூப் பக்கத்தில் கூறியிருப்பது பற்றி பார்ப்போம். இதை கைப்படாமல் 10 நாட்கள் வரை கூட விஅத்து சாப்பிடலாம். அவ்வளவு சுவையாக இருக்கும்.
தேவையான பொருட்கள்:
இஞ்சி - 150 கிராம்
தனியா - 2 டேபிள் ஸ்பூன்
வேர்க்கடலை - 2 டேபிள் ஸ்பூன்
சீரகம் - 1 டேபிள் ஸ்பூன்
வெந்தயம் - 1 டேபிள் ஸ்பூன்
கடுகு - 1 டேபிள் ஸ்பூன்
புளி - 5 துண்டுகள்
பியட்கே மிளகாய் - 6
குண்டூர் மிளகாய் - 6
உப்பு - 1 டேபிள் ஸ்பூன்
வெல்லம் - 1 டேபிள் ஸ்பூன்
நெய் - 4 டேபிள் ஸ்பூன்
கடுகு - 1 தேக்கரண்டி
சீரகம் - 1 டீஸ்பூன்
சிவப்பு மிளகாய் - 2
கிராம்பு
கறிவேப்பிலை
செய்முறை:
இஞ்சி தொக்கு செய்ய, முதலில் பிரெஷ்ஷான இஞ்சியை எடுத்துக்கொள்ளவும். ஒரு கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி சூடாக்கவும். எண்ணெய் சூடானதும், இரண்டு டேபிள் ஸ்பூன் தனியா, இரண்டு டீஸ்பூன் கடலைப்பருப்பு, ஒரு டீஸ்பூன் சீரகம், ஒரு டீஸ்பூன் வெந்தயம், ஒரு டீஸ்பூன் கடுகு, மற்றும் நான்கைந்து சிறிய துண்டு புளி சேர்த்து, அடுப்பை குறைந்த தீயில் வைத்து சிவக்கும் வரை வறுக்கவும்.
இரண்டு மூன்று நிமிடங்கள் வறுத்ததும், 12 காய்ந்த மிளகாய் (ஆறு குண்டூர் மிளகாய் மற்றும் ஆறு வியாபாரி மிளகாய்) சேர்த்து, மிளகாய் சிவக்கும் வரை வறுக்கவும். அனைத்தும் வறுத்ததும், ஒரு தட்டிற்கு மாற்றி ஆறவிடவும். அதே கடாயில் இரண்டு டீஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி, நன்கு கழுவி தோல் நீக்கி நறுக்கிய 150 கிராம் இஞ்சியை சேர்த்து, அடுப்பை மிதமான தீயில் வைத்து ஐந்து நிமிடங்கள் வறுக்கவும். இஞ்சி நன்கு வெந்ததும், அடுப்பை அணைத்து வேறு தட்டிற்கு மாற்றி ஆறவிடவும்.
இப்போது, ஒரு மிக்ஸர் ஜாரில் வறுத்த மிளகாய் மற்றும் மற்ற பொருட்களை சேர்த்து தண்ணீர் சேர்க்காமல் பொடி செய்யவும். பொடித்ததும், வறுத்த இஞ்சியை சேர்த்து தண்ணீர் சேர்க்காமல் அரைக்கவும். அரைத்ததும், ஒரு டீஸ்பூன் உப்பு மற்றும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து, நன்கு ஸ்மூத்தாக அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
அரைத்த தொக்கை ஒரு கிண்ணத்திற்கு மாற்றவும். ஒரு கடாயில் நான்கு டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி சூடாக்கவும். எண்ணெய் சூடானதும், ஒரு டீஸ்பூன் கடுகு, ஒரு டீஸ்பூன் சீரகம் சேர்த்து கடுகு பொரிந்ததும், இரண்டாக உடைத்த இரண்டு மிளகாய், சிறிதளவு பெருங்காயத்தூள், மற்றும் பிரெஷ்ஷான கறிவேப்பிலை சேர்த்து கலந்துவிடவும். இதை கைப்படாமல் வைத்து சாப்பிடலாம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.