உடல் எடையை குறைக்க வேண்டும் என்று கூறுவார்கள். அதற்காக சப்பாத்தி சாப்பிடுவார்கள். ஆனால் அதோட சேர்த்து சாப்பிட வேண்டியதை தவித்துவிட்டு வேறு ஏதாவது கிரேவி வைத்து சாப்பிடுவார்கள். அதனால் உடல் எடை அதிகரிக்க தான் செய்யும் என்று டாக்டர் சிவராமன் கூறுகிறார்.
Advertisment
ஆனால் சப்பாத்திக்கு பருப்புதான் சாப்பிட வேண்டும் என்று டாக்டர் சிவராமன் கூறுகையில் அதை எப்படி சமைப்பது என்று மிஸ்சஸ் ஹோம் ஃபுட் ப்ராடக்ட் யூடியூப் பக்கத்தில் கூறியிருப்பது பற்றி பார்ப்போம்.
சப்பாத்திக்கு எப்போதுமே பருப்பு தால் தான் செய்து சாப்பிட வேண்டும். அப்போதுதான் உடல் எடையை கட்டுக்குள் வைத்திருக்க முடியும். சப்பத்தியோடு வேறு ஏதாவது வைத்து சாப்பிட்டால் அது உடலில் அதிக அளவில் கலோரியை கூட்டிவிடும் என்கிறார்.
தேவையான பொருட்கள்
Advertisment
Advertisements
எண்ணெய் கடுகு சீரகம் பூண்டு பச்சை மிளகாய் தக்காளி பாசிபருப்பு வெங்காயம் நெய் மஞ்சள் தூள் உப்பு பெருங்காயத்தூள் கொத்தமல்லி தழை
செய்முறை
ஒரு குக்கரில் எண்ணெய் கடுகு, சீரகம், பூண்டு, வெங்காயம், மிளகாய், தக்காளி சேர்த்து வதக்கி சிறிது நெய் விட்டு அதில் பாசிப்பருப்பு, மஞ்சள் தூள், உப்பு தண்ணீர் விட்டு குழைய வேக விட்டு சிறிது பெருங்காயத்தூள், கொத்தமல்லி தலைகளை தூவி கொதிக்க விட்டு இறக்கினால் சுவையான தால் ரெடியாகிவிடும். இதனை சப்பாத்திக்கு வைத்து சாப்பிடும் போது கலோரி அதிகரிக்காது உடல் எடையை பராமரிக்க உதவும்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.