இந்த சைடிஷ்க்கு சொத்தை எழுதி கொடுக்கலாம்... கூழ், கஞ்சி குடிக்கும் போது இத தொட்டு சாப்பிட்டு பாருங்க!
எப்போதும் ராகி கூழ் நன்றாக தயார் செய்து விட்டு அதற்கு சைட் டிஷ் செய்வதில் கவனம் செலுத்த மாட்டோம். ஆனால் இந்த மாதிரி ராகி கூழுக்கு சுவையான சைடிஷ் செய்து பாருங்கள். கப் நிறைய கூழ் குடிப்பார்கள்.
எப்போதும் ராகி கூழ் நன்றாக தயார் செய்து விட்டு அதற்கு சைட் டிஷ் செய்வதில் கவனம் செலுத்த மாட்டோம். ஆனால் இந்த மாதிரி ராகி கூழுக்கு சுவையான சைடிஷ் செய்து பாருங்கள். கப் நிறைய கூழ் குடிப்பார்கள்.
எப்போதும் கூழ் ஈஸியாக செய்து விடுவோம். ஆனால் அதற்கு என்ன சைட் டிஷ் செய்வது என்றுதான் குழப்பமாக இருக்கும். ஆனால் இனி குழப்பம் இல்லாமல் ஈஸியாக விதவிதமான சைட் டிஷ்கள் எப்படி என்று டீ கடை கிச்சன் யூடியூப் பக்கத்தில் கூறியிருப்பது பற்றி பார்ப்போம்.
Advertisment
தேவையான பொருட்கள்
கத்திரிக்காய் தக்காளி புளி காய்ந்த மிளகாய் உப்பு பெரிய வெங்காயம் நல்லெண்ணெய் மாங்காய் மிளகாய் தூள்
செய்முறை
Advertisment
Advertisements
கத்திரிக்காய் மற்றும் தக்காளி வாட்டல்: வெள்ளை கத்திரிக்காய் மற்றும் தக்காளி எடுத்து, தீயில் தோல் கருகும் வரை நன்றாக வாட்டவும். பின்னர் வாட்டிய கத்திரிக்காய், தக்காளி, சிறிய துண்டு புளி, காய்ந்த மிளகாய் மற்றும் 1/4 டீஸ்பூன் உப்பு சேர்த்து நன்றாக அரைத்து கொள்ளவும். பின்னர், 1/2 பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் மற்றும் 1 டீஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்து கலக்கவும்.
மாங்காய்: மாங்காயை மெல்லிய துண்டுகளாக வெட்டி, மிளகாய் தூள் மற்றும் உப்பு சேர்த்து கலந்து வைக்கவும். அதேபோல கத்தரி வத்தல், கோவக்காய் வத்தல், மோர்மிளகாய் வத்தல், சீனரக்காய் வத்தல், மற்றும் அதலக்காய் வத்தல் போன்றவற்றை பொரித்து தயாராக வைக்கவும்.
ராகி கூழ் செய்ய தேவையான பொருட்கள்
பச்சரிசி குருணை - 100 கிராம் ராகி மாவு - 1 கப்
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் 1/2 லிட்டர் தண்ணீர் ஊற்றி சூடாக்கவும். தண்ணீர் சூடானதும், 100 கிராம் பச்சரிசி குருணை சேர்த்து வேக வைக்கவும். குருணை வெந்து கொண்டிருக்கும்போது, 1 கப் ராகி மாவை 1 கப் தண்ணீர் சேர்த்து கட்டி இல்லாமல் கரைக்கவும். குருணை முக்கால்வாசி வெந்ததும், கரைத்து வைத்த ராகி மாவு கரைசலை சேர்த்து கிளறவும்.
நன்றாக கொதித்து வரும் வரை கிளறி இறக்கவும். அவ்வளவுதான் சுவையாக ராகி கூழ் ரெடியாகிவிடும். இந்த ராகி கூழை, தயார் செய்த ஒரு மணி நேரம் அல்லது இரண்டு மணி நேரத்திலேயே குடிக்கலாம். இதோடு இந்த சைடிஷ்களை சேர்த்து சாப்பிடும்போது சுவையாக இருக்கும்.