Drinking Coffee On an Empty Stomach Can Harm You: காப்பி என்றாலே சொத்தையும் எழுதி வைக்கும் அளவுக்கு நம்மில் பலர் காப்பி பிரியர்களாக இருப்பார்கள். இந்நிலையில் காப்பி, குடிப்பத்தால் நமக்கு சில நன்மைகள் கிடைக்கிறது.
சிறிய நேரத்தில் அதிக புத்துணர்வு கிடைகும். காப்பியில் ஒரு வகை நியூரோடிரான்ஸ்மிட்டர் உள்ளது. இது நமது நரம்புகளை ஊக்கப்படுத்தி, சேர்வை நீக்கும்.
மேலும் இதில் இருக்கும் பண்புகள், சர்க்கரை நோய் ஏற்படாமலும் தடுப்பதாக கூறப்படுகிறது.
மேலும் காப்பி குடிப்பதால் மூளை சுறுசுறுப்பாக செயல்படுகிறது. மேலும் மூளை சமந்தப்பட்ட நோய்களான டிமென்ஷியா மற்றும் அல்சைமர் நோய்யை தடுக்க உதவும்.

காப்பில் இருக்கும் சில சத்துக்கள் உடல் எடை குறைய உதவுகிறது. உடல் எடைகுறைக்கும் பயணத்தில் இருப்பவர்கள், பால், சர்க்கரை இல்லாத காப்பி குடிக்கலாம்.
மேலும் மன அழுத்ததில் இருந்து நம்மை காப்பாற்ற உதவும்.
ஆனால் காப்பி குடிப்பதால் நன்மைகள் மட்டும் இல்லை இதனால் தீமைகளும் இருக்குகிறது. அதிக சர்க்கரை சேர்த்து காப்பி குடித்தால், ரத்த சர்க்கரை அதிகரிக்கும்.
மேலும் அடிக்கடி காப்பி குடிப்பதால், அடிக்கடி நரம்பு மண்டலம் தூண்டப்படுகிறது. இதனால் ரத்த அழுத்தம் அதிகரிக்கும். மேலும் ஜீரண சக்தி குறையும். உணவை தவிர்த்து காப்பி குடித்தால் குமட்டல் வாந்தி ஏற்படுகிறது.
தலைவலிக்காக காப்பி குடிப்பதாக சொல்லிவிட்டு அதிக காப்பி குடித்தால் ஒற்றை தலைவலி வரும். மேலும் அதிக காப்பி குடிப்பதால் மாரடைப்பு வர வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
மேலும் சில மாத்திரைகள் மற்றும் மருத்துவத்தை பின்பற்றும்போது , காப்பி குடிப்பது பெரும் சிக்கலாக மாறிவிடும்.