காலையில் வேலைக்கு செல்வதில் பலரும் பிஸியாகவே இருப்போம். சில நேரங்களில் லேட்டாகி விடும். காலை உணவு தவிர்த்துவிட்டு செல்பவர்களும் உண்டு. காலை உணவை கட்டாயம் சாப்பிட வேண்டும். காலை உணவை தவிர்க்க கூடாது. அந்த வகையில் காலையில் ஈஸியாக செய்து சாப்பிட முட்டை சீஸ் ரோல் செய்யலாம். குழந்தைகளும் இதை விரும்பி சாப்பிடுவர். குழந்தைகளுக்கு ஈவ்னிங் ஸ்நாக்ஸ் ஆக கூட கொடுக்கலாம்.
தேவையான பொருட்கள்
முட்டை - 5
வெள்ளரிக்காய், கேரட், வெங்காயம் - தலா 1
முட்டைகோஸ் - 1/4 கப்
வறுத்த தேங்காய்த் துருவல் - சிறிதளவு
சீஸ் - 25 கிராம்
மிளகுத் தூள் - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
மஞ்சள் தூள் - சிறிதளவு
செய்முறை
வெள்ளரிக்காய், கேரட், வெங்காயம், முட்டைக் கோஸை பொடியாக நறுக்கி கொள்ளவும். சீஸை துருவி எடுத்துக் கொள்ளவும். இப்போது ஒரு பாத்திரத்தில் கேரட், வெள்ளரிக்காய், கோஸ், வெங்காயம், கொத்தமல்லித்தழையை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
மற்றொரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றி உப்பு, மஞ்சள் தூள், மிளகத்தூள் சேர்த்து கலக்கவும். இப்போது தோசைக் கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் முட்டை கலவையை மெலிதாக ஊற்றி கொஞ்சம் வெந்ததும் நாம் ஏற்கனவே கலந்து வைத்துள்ள காய்கறிகளை வைத்து வேக வைக்கவும். அதன் மேல் சீஸை தூவி விடவும். அதன் நறுக்கி எடுத்து சூடாக பரிமாறலாம். சுவையான முட்டை சீஸ் ரோல் ரெடி.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil