பாதூஷாவை இப்படி செய்து பாருங்க. செம்ம சுவையா இருக்கும் . செப் தாமு ரெசிபி
தேவையான பொருட்கள்
கோதுமை மாவு - ஒன்றரை கப்
சோள மாவு - 2 டேபிள் ஸ்பூன்
கெட்டியான நெய் - அரை கப்
தயிர் - 2 டேபிள் ஸ்பூன்
சமையல் சோடா - கால் டீஸ்பூன்
சர்க்கரை - 1 கப்
தண்ணீர் - அரை கப்,
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை: முதலில் ஒரு பாத்திரத்தில் சர்க்கரை, தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைத்து காய்ச்சவும். அதாவது சர்க்கரை பாகு காய்ச்ச வேண்டும். பிசுக்கு பதத்திற்கு வந்தவுடன் அடுப்பில் இருந்து இறக்கவும். அடுத்ததாக மற்றொரு பாத்திரத்தில் கோதுமை மாவு, சோள மாவு, நெய் சேர்த்து கலக்கவும். தயிர், சமையல் சோடா இரண்டையும் சேர்த்து நுரைக்க அடித்து, மாவுடன் கலந்து பிசையவும். கலவையில் தண்ணீர் சேர்ப்பதை கூடுமானவரை தவிர்க்கவும். அடுத்தாக மாவை சிறுசிறு உருண்டைகாக உருட்டி, பின் அதை வட்ட வடிவில் பாதுஷா வடிவில் உள்ளங்கையில் வைத்து அழுத்தி நடுவில் சிறிய ஓட்டை போடவும். இப்போது அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வட்ட வடிவில் உள்ள பாதுஷாவை போட்டு எடுக்கவும். பொன்னிறமாகும் வரை போட்டு எடுக்கவும். பின்னர், பாதுஷாவை சூடான சர்க்கரைப் பாகில் போடவும். சிறிது நேரத்திற்கு பிறகு அதை எடுத்து செர்ரி அல்லதுதேங்காய்த் துருவல் கொண்டு அலங்கரிக்கவும். அவ்வளவு தான் வீட்டிலேயே சுவையான கோதுமை பாதுஷா ரெடி.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“