ஒரு கப் கடலை மாவு, சர்க்கரை போதும்… வாயில் கரையும் சூப்பர் ஸ்வீட் ரெடி; சிம்பிள் ரெசிபி இதோ

கடலை மாவு மற்றும் சர்க்கரை வைத்து வாயில் கரையும் அளவிற்கு சுவையான ஒரு ஸ்வீட் எப்படி செய்வது என்று பார்ப்போம்.

கடலை மாவு மற்றும் சர்க்கரை வைத்து வாயில் கரையும் அளவிற்கு சுவையான ஒரு ஸ்வீட் எப்படி செய்வது என்று பார்ப்போம்.

author-image
WebDesk
New Update
besan burfi

கோடை விடுமுறை விட்டாச்சு இனி பிள்ளைகள் எதாவது ஸ்நாக்ஸ் செய்து கொடுக்க சொல்லி கேட்க ஆரம்பித்து விடுவார்கள். தினமும் ஒரு ஸ்நாக்ஸ் செய்து கொடுக்க வேண்டிய நேரம் வந்து விட்டது. அதனால் இனி விதவிதமான ஸ்நாக்ஸ் செய்ய கற்றுக்கொள்ளுங்கள். 

Advertisment

அதுவும் பிள்ளைகளுக்கு ஹெல்தியாகவும் கடைகளில் கிடைப்பது போன்றும் செய்து கொடுக்க கற்றுக்கொள்ளுங்கள். கேக், முறுக்கு, ஜூஸ், பர்பி என பலவகையான் ஸ்நாக்ஸ் வகைகள் உள்ளது. அதை எல்லாம் செய்வதை விட பிள்ளைகளுக்கு பிடித்த மாதிரி செய்வது தான் டாஸ்க்.

வெறும் கடலை மாவு வைத்து சுவையான ஒரு பர்பி எப்படி செய்வது என்று இந்தியன் ரெசிப்பீஸ் தமிழ் யூடியூப் பக்கத்தில் செய்து காட்டியிருப்பது பற்றி பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:

Advertisment
Advertisements

கடலை மாவு - ஒன்றரை கப்
சர்க்கரை - 1/2 கப்
நெய் அல்லது எண்ணெய் - 1/2 கப்
ஃபுட் கலர்

செய்முறை

ஒரு கனமான கடாயில் கடலை மாவு, நெய்யை எடுத்து வறுக்கவும். மிதமான சூட்டில் வைத்து வதக்கவும். கடலை மாவு நெய்யில் வறுபட்டு கெட்டியாக மாறும். பின்னர் பதம் இல்லாமல் சர்க்கரை பாகு செய்து அதில் ஃபுட் கலர் எதாவது சேர்க்கவும். 

பின்னர் இதை எடுத்து கடலை மாவில் சேர்த்து கிளறி விடவும். கெட்டியாக ஆரம்பிக்கும் எனவே சீக்கிறம் கிளறி ஒரு கப்பில் சேர்க்கவும். 10 நிமிடங்கள் கழித்து துண்டுகளாக வெட்டி பரிமாறலாம். அவ்வளவு தான் கடலை மாவு பர்ஃபி தயார்.

பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.

Cooking Tips Healthy light weight snacks to eat in this season

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: